இயக்குனரான சூர்யா மகள்.. முதல் படத்திற்கு கிடைத்த விருது: ஜோதிகா பெருமிதம்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் சூர்யாவின் மகள் தியா ஆவணப்படம் ஒன்றை இயக்கிய நிலையில், அந்த படத்திற்கு விருது கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து நடிகை ஜோதிகா தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து, மகளால் பெருமை அடைவதாக பதிவு செய்துள்ளார்.
தமிழ் சினிமாவின் பிரபல நட்சத்திர ஜோடிகள் சூர்யா - ஜோதிகா தம்பதியின் மகள் தியா, பள்ளியில் எடுத்த ஆவணப்படம் "லீடிங் லைட்". இந்த ஆவணப்படம் தற்போது விருதை பெற்றுள்ளது. இந்த ஆவணப்படத்திற்கு சிறந்த திரைக்கதை எழுத்தாளர் விருதும் வழங்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த தகவலை நடிகை ஜோதிகா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து, "சினிமா துறையில் ஒளிப்பதிவு பணிகளில் ஈடுபடும் பெண்களின் வாழ்வை பற்றிய ஆவணப்படம் எடுத்து பெருமை அளித்துள்ள தியாவை புகழ்கிறேன். இத்தகைய செயற்பாடுகளை அவர் தொடர்ந்து செய்ய வேண்டும்" என்று கூறியுள்ளார். மேலும் தனது மகளின் ஆவணப்படத்தின் லிங்கையும் இணைத்து பதிவிட்டுள்ள நிலையில், இந்த ஆவணப்படம் ஏராளமானோர் பார்வைக்கு சென்றுள்ளது.
ஏற்கனவே, விஜய்யின் மகன் இயக்குநராக இருக்கும் நிலையில், சூர்யா - ஜோதிகா தம்பதியின் மகளும் வருங்காலத்தில் இயக்குநராக வர வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. .
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com