சூர்யா 37' படம் குறித்த முக்கிய அறிவிப்பு

  • IndiaGlitz, [Monday,January 08 2018]

சூர்யா நடித்த 35வது படமான 'தானா சேர்ந்த கூட்டம்' திரைப்படம் வரும் பொங்கல்  தினத்தில் வெளியாகவுள்ளது. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் டீசர், பாடல்கள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளதால் இந்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது

இந்த நிலையில் சூர்யாவின் 36வது படத்தை செல்வராகவன் இயக்கவுள்ளார் என்பதும் இந்த படத்தில் ராகுல் ப்ரித்திசிங் மற்றும் சாய்பல்லவி என இரண்டு ஹீரோயின்கள் நடிக்கவுள்ளனர் என்று வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் தொடங்கவுள்ளதாகவும், வரும் தீபாவளி திருநாளில் இந்த படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது

இந்த நிலையில் சூர்யாவின் 37வது படம் குறித்த தகவலும் தற்போது வெளியாகியுள்ளது. 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் தெலுங்கு பதிப்பான 'கேங்க்' படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் சூர்யாவின் 37வது படத்தை கே.வி.ஆனந்த் இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சூர்யா நடிப்பில் உருவான 'அயன்' மற்றும் 'மாற்றான்' ஆகிய படங்களை கே.வி.ஆனந்த் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

More News

2வது வாரத்திலும் விறுவிறுப்பான வசூல் வேட்டையில் வேலைக்காரன்

சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் மோகன்ராஜா இயக்கிய 'வேலைக்காரன்' திரைப்படம் கடந்த டிசம்பர் 22ஆம் தேதி பெரும் எதிர்பார்ப்புடன் வெளிவந்து விமர்சகர்களின் பாசிட்டிவ் ரிசல்ட்டை பெற்றது.

மலேசியா எனக்கு இரண்டாவது வீடு: ரஜினிகாந்த்

நேற்று மலேசியாவில் நடைபெற்ற நட்சத்திர கலைவிழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன், நடிகர் சங்க நிர்வாகிகள் மற்றும் கோலிவுட் திரையுலகின் நடிகர் நடிகைகள் பலர் கலந்து கொண்டனர்.

110 திரையரங்குகளில் 25 நாட்கள்: அருவியின் அருமையான சாதனை

எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி வெளியான சின்ன பட்ஜெட் படமான 'அருவி' மிகப்பெரிய வெற்றியை பெற்றது மட்டுமின்றி வசூலிலும் சாதனை செய்து வருகிறது.

கமல் அறிவுரையை ஏற்றுக்கொள்ள தயார்: அதிமுக அமைச்சர்

உலக நாயகன் கமல்ஹாசன் கடந்த சில மாதங்களாகவே தமிழக அரசுக்கு எதிராக விமர்சனம் செய்து வருவதோடு, பல்வேறு பிரச்சனைகளை தீர்க்க அறிவுரையும் வழங்கி வருகிறார்.

இந்த ஐந்து வார்த்தைகளை ரஜினியால் சொல்ல முடியுமா? அன்புமணி

ரஜினிகாந்த் ஐந்தே ஐந்து வார்த்தையை கூறுவாரா? மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கணும்,. இந்த ஐந்து வார்த்தையை ரஜினியால் சொல்ல முடியுமா?