சூர்யாவுக்கு ஆஸ்கார் குழு கொடுத்த கெளரவம்: குவியும் வாழ்த்து!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் சூர்யாவுக்கு ஆஸ்கார் குழு நிர்வாகம் கொடுத்த கௌரவம் குறித்த தகவல் இணையதளங்களில் வைரலாகி வருவதையடுத்து சூர்யாவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
உலகத் திரையுலகில் பெரியதாக கருதப்படும் ஆஸ்கார் விருது ஒவ்வொரு வருடமும் வழங்கப்படுகிறது. ஆங்கில படங்களுக்கு வழங்கப்படும் விருதாக இருந்தாலும் உலகசினிமா ஆஸ்கர் விருது மீது மிகப்பெரிய மரியாதை வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஆஸ்கர் விருதுக்காக சிறந்த வெளிநாட்டு திரைப்படத்திற்கான பிரிவில் விருது வழங்குவதற்காக ஆஸ்கர் குழு உறுப்பினர் குழு புதிதாக 397 உறுப்பினர்களை சேர்க்க உள்ளது. இதில் தற்போது நடிகர் சூர்யா, நடிகை கஜோல் ஆகியோர் உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
உலகம் முழுவதும் இருந்து 4 ஆயிரம் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் தமிழ் திரையுலகில் ஏற்கனவே ஏஆர் ரகுமான் இந்த குழுவின் உறுப்பினராக உள்ளார். இதனை அடுத்து தற்போது சூர்யா ஆஸ்கர் நிர்வாக குழுவுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த குழுவில் உறுப்பினர்களாக உள்ளவர்கள் தான் ஆஸ்கர் பட்டியலுக்கான திரைப்படங்களை தேர்வு செய்ய வாக்களிக்கும் உரிமை பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆஸ்கார் நிர்வாக குழுவில் சூர்யாவுக்கு இடம் கிடைத்ததை அடுத்து அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments