சூர்யாவுக்கு ஆஸ்கார் குழு கொடுத்த கெளரவம்: குவியும் வாழ்த்து!

  • IndiaGlitz, [Wednesday,June 29 2022]

நடிகர் சூர்யாவுக்கு ஆஸ்கார் குழு நிர்வாகம் கொடுத்த கௌரவம் குறித்த தகவல் இணையதளங்களில் வைரலாகி வருவதையடுத்து சூர்யாவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

உலகத் திரையுலகில் பெரியதாக கருதப்படும் ஆஸ்கார் விருது ஒவ்வொரு வருடமும் வழங்கப்படுகிறது. ஆங்கில படங்களுக்கு வழங்கப்படும் விருதாக இருந்தாலும் உலகசினிமா ஆஸ்கர் விருது மீது மிகப்பெரிய மரியாதை வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஆஸ்கர் விருதுக்காக சிறந்த வெளிநாட்டு திரைப்படத்திற்கான பிரிவில் விருது வழங்குவதற்காக ஆஸ்கர் குழு உறுப்பினர் குழு புதிதாக 397 உறுப்பினர்களை சேர்க்க உள்ளது. இதில் தற்போது நடிகர் சூர்யா, நடிகை கஜோல் ஆகியோர் உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

உலகம் முழுவதும் இருந்து 4 ஆயிரம் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் தமிழ் திரையுலகில் ஏற்கனவே ஏஆர் ரகுமான் இந்த குழுவின் உறுப்பினராக உள்ளார். இதனை அடுத்து தற்போது சூர்யா ஆஸ்கர் நிர்வாக குழுவுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த குழுவில் உறுப்பினர்களாக உள்ளவர்கள் தான் ஆஸ்கர் பட்டியலுக்கான திரைப்படங்களை தேர்வு செய்ய வாக்களிக்கும் உரிமை பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆஸ்கார் நிர்வாக குழுவில் சூர்யாவுக்கு இடம் கிடைத்ததை அடுத்து அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
 

More News

தயவுசெய்து இதை மட்டும் செய்யாதீர்கள்: மீனா கணவர் இறப்பு குறித்து குஷ்பு!

நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் நேற்று இரவு காலமான நிலையில் தயவுசெய்து இதை மட்டும் செய்ய வேண்டாம் என நடிகை குஷ்பு ஊடகத்தினர்களை கேட்டுக்கொண்டுள்ளார். 

கமல்ஹாசனின் 'விக்ரம்' ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த 'விக்ரம்' திரைப்படம் கடந்த 3ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தின்  ஓடிடி ரிலீஸ் குறித்து

பில்கேட்ஸை சந்தித்த மாஸ் நடிகர்: என்ன சொல்லியிருக்கார் பாருங்க!

தென்னிந்திய திரையுலகின் மாஸ் நடிகர் உலக பணக்காரர்களில் ஒருவராகிய மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் பில் கேட்ஸ் அவர்களை சந்தித்து உள்ள புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. 

விஜய் டிவி பிரபலத்தின் 2வது மனைவி வளைகாப்பு புகைப்படங்கள்!

விஜய் டிவியில் 'கலக்கப்போவது யாரு' என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நவீனுக்கு இரண்டாவது திருமணம் நடந்ததாக யாருக்குமே தெரியாத நிலையில் தற்போது அவரது இரண்டாவது

ஹன்சிகாவின் வேற லெவல் பீச் கிளாமர் புகைப்படம்: இணையத்தில் வைரல்!

தமிழ் திரையுலகில் ஒரு சிறிய இடைவெளிக்கு பின்னர் தற்போது மீண்டும் பிஸியான நடிகையாக மாறி இருக்கும் ஹன்சிகாவின் வேற லெவல் கிளாமர் புகைப்படம் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்