'சூர்யா 42' படத்திற்காக இவ்வளவு மெனக்கிடுகிறாரா சூர்யா? வேற லெவல் வீடியோ..!

  • IndiaGlitz, [Saturday,February 11 2023]

சூர்யா நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் ’சூர்யா 42’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு வரலாற்று சம்பந்தமான காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

13 வித்தியாசமான கெட்டப்பில் சூர்யா இந்த படத்தில் நடிக்க இருப்பதாகவும் 10க்கும் மேற்பட்ட மொழிகளில் உருவாகும் இந்த படம் இரண்டு பாகங்களாக உருவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் வரலாற்று சம்பந்தமான காட்சிகளுக்காக சூர்யா தற்போது வேற லெவலில் தயாராகி வருகிறார்.

1000 வருடங்களுக்கு முந்தைய சரித்திர காட்சிகளின் படப்பிடிப்பிற்கு முன் அவர் தனது உடலை ஃபிட்டாக வைக்க வேண்டும் என்பதற்காக வேற லெவலில் உடற்பயிற்சி செய்யும் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் ’சூர்யா 42’ படத்திற்காக சூர்யா இவ்வளவு மெனக்கெடுக்கிறாரா என்று ஆச்சரியத்துடன் கேள்வி எழுப்பியுள்ளனர்.

சூர்யா ஜோடியாக திஷா பதானி நடித்து வரும் இந்த படம் வெற்றி பழனிசாமி ஒளிப்பதிவில் நிஷா யூசுப் படத்தொகுப்பில் உருவாகி வருகிறது.

More News

வெள்ளை நிறமே.. வெள்ளை நிறமே.. திடீரென கிளாமரை மறந்த ரம்யா பாண்டியன்..!

நடிகை ரம்யா பாண்டியன் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமரான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்து வரும் நிலையில் திடீரென வெள்ளை நிறத்தில் துளியும் கிளாமர் இன்றி சேலை

கீர்த்தி சுரேஷின் வேற லெவல் வொர்க் அவுட்: வைரல் வீடியோ..!

தமிழ் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான கீர்த்தி சுரேஷ் வேற லெவல் வொர்க் அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோவுக்கு இரண்டு லட்சத்திற்கும் அதிகமான லைக்ஸ்

அஜித் படத்தின் மீது போலீசில் புகார் அளித்த இயக்குனர்: என்ன காரணம்?

அஜித் நடித்த 'துணிவு' திரைப்படம் கடந்த பொங்கல் விருந்தாக வெளியாகி ரூ.200 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் அஜித் நடிப்பில் எச் வினோத் இயக்கத்தில் கடந்த ஆண்டு

ஒரே விழாவில் கமல்ஹாசன் அமீர்கான் அக்சயகுமார் மோகன்லால்: என்ன விசேஷம்?

 ராஜஸ்தானில் நேற்று நடந்த திருமண விழாவில் கமலஹாசன், அமீர்கான், கரன்ஜோகர், பிருத்திவிராஜ் சுகுமாரன், அக்ஷய்குமார், மோகன்லால் உள்பட பல பிரபலங்கள் கலந்து கொண்ட புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி

குறட்டையை மையப்படுத்தி தயாராகும் 'குட் நைட்': ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை வெளியிட்ட அனிருத்..!

'ஜெய் பீம்' நடிகர் மணிகண்டன் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் புதிய திரைப்படத்திற்கு, 'குட் நைட்' என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.