சூர்யா ரசிகர்களுக்கு இன்று மீண்டும் சர்ப்ரைஸ்

  • IndiaGlitz, [Wednesday,January 03 2018]

கடந்த இரண்டு நாட்களாகவே சூர்யாவின் திரைப்படங்கள் குறித்த செய்திகள் அவரது ரசிகர்களுக்கு விருந்தாக வெளிவந்து கொண்டிருக்கின்றது. சூர்யாவின் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் சென்சார் தகவல்கள், பொங்கல் வெளியீடு, சுர்யா 36 படத்தின் பூஜை என செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் இன்று சூர்யாவின் ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு சர்ப்ரைஸ் செய்தி கிடைத்துள்ளது.

சூர்யாவின் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் பாடல்கள் இன்று வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த படத்தின் நான்கு பாடல்கள் சிங்கிள் பாடலாக வெளிவந்துவிட்ட நிலையில் இந்த படத்தில் உள்ள ஐந்து பாடல்கள் அடங்கிய ஆல்பம் இன்று வெளியாகவுள்ளதாக இந்த படத்தின் இசையமைப்பாளர் அனிருத் தெரிவித்துள்ளார்

இதுகுறித்து அனிருத் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் கூறியிருப்பதாவது, 'நானா தானா வீணா போனா சரியே இல்லடா, சொடக்கு மேல சொடக்கு போடுது, வெட்டி வீரத்தால வீணா சேர்ந்த கூட்டம், பீலா பீலா பீலா பீலா உடாதே ஆகிய நான்கு பாடல்கள் ஏற்கனவே வெளியாகிவிட்ட நிலையில் என்னுடைய ஃபேவரேட் பாடலான ஐந்தாவது பாடலுடன் கூடிய ஆல்பம் இன்று வெளியாகிறது' என்று கூறியுள்ளார். இன்று பாடல்கள் வெளியாவதை  அடுத்து விரைவில் டிரைலரும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

More News

நிக்கி கல்ராணிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகையான நிக்கி கல்ராணி இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு IndiaGlitz சார்பில் பிறந்த நாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்

கருணாநிதியுடன் ரஜினிகாந்த் திடீர் சந்திப்பு

ன்று மாலை திமுக தலைவர் கருணாநிதியை ரஜினிகாந்த சந்திக்கவுளார். இந்த அவருக்கு மாலை நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

ஆன்மீக அரசியல் தவறாகவே முடியும்: டிடிவி தினகரன்

ஆன்மீகம் என்பது தனி மனிதனை ஒழுங்குபடுத்தவே; அரசியலில் பயன்படுத்தினால் அது தவறாகத்தான் முடியும்.

தமிழகத்தில் தான் மிகப்பெரிய புரட்சிகள் தொடங்கியுள்ளது: ரஜினிகாந்த்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த 31ஆம் தேதி அரசியல் வருகை குறித்த அறிவிப்பை வெளியிட்ட நிலையில் இன்று சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பில் அவர் பேசியதாவது:

பலூன் ஹிட் படம்தான். ஆனால் எனக்கு மகிழ்ச்சியில்லை. இயக்குனர் சினிஷ்

பலூன் பட வெற்றியால் தயாரிப்பாளருக்கு மகிழ்ச்சி. ஆனால் தனிப்பட்ட முறையில் என்னால் இந்த வெற்றியை கொண்டாட முடியவில்லை.