close
Choose your channels

15 ஆண்டுக்கு பின் வெளியாகும் சூர்யாவின் சூப்பர் ஹிட் ரொமான்ஸ் படம்: ரசிகர்கள் குஷி..!

Sunday, June 25, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த 2008 ஆம் ஆண்டு சூர்யாவின் சூப்பர் ஹிட் ரொமான்ஸ் திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் தற்போது இந்த படம் தெலுங்கில் டப் செய்யப்பட்டு தெலுங்கானா மற்றும் ஆந்திராவில் ரிலீஸ் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.

சூர்யா, சமீரா ரெட்டி, சிம்ரன், திவ்யா நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவான திரைப்படம் ’வாரணம் ஆயிரம்’. கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் தமிழில் வெளியான இந்த படம் தெலுங்கில் டப் செய்யப்பட்டு அடுத்த மாதம் மூன்றாவது வாரத்தில் தெலுங்கு மாநிலங்களில் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தெலுங்கில் இந்த படம் அமெரிக்கா உள்பட ஒரு சில நாடுகளிலும் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.

சூர்யாவின் சூப்பர் ஹிட் ரொமான்ஸ் படமான இந்த படத்தை காண தெலுங்கு ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் இடம் பெற்ற ஹாரிஸ் ஜெயராஜ் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் என்பது அனைவரும் அறிந்ததே.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment