வானம் என்ன அவன் அப்ப வீட்டு சொத்தா? இறக்குடா பிளைட்டா? சூரரை போற்று டிரைலர்

  • IndiaGlitz, [Monday,October 26 2020]

சூர்யாவின் ’சூரரைப்போற்று’ திரைப்படம் அக்டோபர் 30-ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியிட திட்டமிடப்பட்டு இருந்த நிலையில் இந்திய விமானப் படையிடம் இருந்து வரவேண்டிய தடையில்லா சான்றிதழ் தாமதமாக வந்ததால் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சற்று முன் இந்த படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் ஆகியதோடு நவம்பர் 12ஆம் தேதி இந்த திரைப்படம் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 14ஆம் தேதி தீபாவளி என்ற நிலையில் தீபாவளி விருந்தாக இந்தப் படம் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்று முன் வெளியான ட்ரெய்லரில் சூரரைப்போற்று படத்தின் அசத்தலான காட்சிகள் இடம்பெற்றுள்ளன. ஏரோட்டுறங்களும் ஏரோப்ளேனில போவான்’ என்ற சூர்யாவின் வசனம் உள்பட டிரைலரில் உள்ள அனைத்து வசனங்களும் அட்டகாசமாக உள்ளது.

சாதாரண குடிமகன் ஒருவர் விமான நிறுவனம் ஆரம்பித்து ஒரு ரூபாய்க்கு மக்களை பறக்க வைக்க வேண்டும் என்ற கனவு நிறைவேறியதா? அல்லது அந்த கனவை நிறைவேற்ற விடாமல் தடுக்கும் தொழிலதிபர்களின் சதி நிறைவேறுகிறதா? என்பதுதான் இந்த படத்தின் கதை என்பது டிரைலரில் இருந்து தெரிய வருகிறது.

சுதாகொங்கராவின் மனதில் தோன்றிய காட்சி அமைப்புகள் அப்படியே திரையில் தோன்றும் வகையில் படமாக்கியிருப்பது நிச்சயம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இந்த படம் வித்தியாசமான இருந்தாக இருக்கும் என கருதப்படுகிறது.

சூர்யாவின் அட்டகாசமான நடிப்பு மற்றும் ஆச்சரியப்படும் வகையிலான காட்சி அமைப்புகள் இந்த ட்ரெய்லரில் இருப்பதால் இந்த படம் மிகப்பெரிய வெற்றி அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

’வானம் என்ன அவன் அப்பன் வீட்டு சொத்தா? பிளைட்டை இறக்கிடா நான் பாத்துக்குறேன் போன்ற உணர்ச்சி மிகுந்த வசனங்கள் படத்தின் பிளஸ் பாயிண்டாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

More News

நம் மனதில் எப்போதும் சூப்பர் கிங்ஸ்களாக இருப்பார்கள்: சாக்சி தோனியின் நெகிழ்ச்சியான பதிவு

நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடரில் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பெங்களூரு அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வீழ்த்தியது.

செய்தி வாசிப்பில் அனிதா செய்த தவறு: திருத்திய ரியோ

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 4ஆம் தேதி தொடங்கி தற்போது 20 நாட்களில் முடிந்து பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இந்த சீசன் மட்டும் ஒரு வித்தியாசமான சீசனாகவும்,

போதைப்பொருள் விவகாரம்: பிரபல டிவி நடிகை கைது!

கடந்த சில நாட்களாக பாலிவுட் மற்றும் கன்னட திரையுலகில் போதைப்பொருள் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது என்பதும்

சூர்யாவின் அடுத்த படம்: அதிகாரபூர்வ அறிவிப்பு

சூர்யா நடித்த 'சூரரைப்போற்று' திரைப்படம் விரைவில் ஓடிடியில் வெளியாக இருக்கும் நிலையில் அவரது அடுத்த படம் எது என்ற கேள்வி கடந்த சில மாதங்களாக எழுந்து வந்தது 

தமிழ்நாட்டுல மட்டும்தான் மதத்தை வச்சு ஓட்டு வாங்க முடியலை: 'மூக்குத்தி அம்மன்' டிரைலர்

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடிப்பில் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'மூக்குத்தி அம்மன் திரைப்படம். வரும் தீபாவளி அன்று ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது