சூர்யாவின் 'சூரரை போற்று' படம் குறித்த சூப்பரான தகவல்

  • IndiaGlitz, [Monday,December 23 2019]

கடந்த சில நாட்களாக சூர்யாவின் அடுத்த படம் குறித்த அறிவிப்புகள் வெளிவந்து டுவிட்டர் மற்றும் பேஸ்புக் சமூக வலை தளங்களை டிரெண்டாக்கி வருகின்றன என்பது தெரிந்ததே. சூர்யாவின் 39வது படமான ஹரி இயக்கும் படத்திற்கு டி.இமான் இசையமைக்கவிருக்கும் செய்தியும், சூர்யாவின் 40வது படமான படத்தை வெற்றிமாறன் இயக்கவிருப்பதாகவும் கலைப்புலி எஸ் தாணு தயாரிக்க இருப்பதாகவும் வெளிவந்த செய்தியும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் சூர்யா நடித்து முடித்துள்ள ’சூரரைப்போற்று’ என்ற படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனை அடுத்து இந்த படத்தின் டீசர் வெகு விரைவில் வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்தனர். தற்போது இது குறித்த ஒரு தகவலை இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் அவர்கள் தெரிவித்துள்ளார்

சூரரைப்போற்று படத்தின் டீசர் வரும் ஜனவரியில் எதிர்பார்க்கலாம் என ஜிவி பிரகாஷ் அறிவித்துள்ளதை அடுத்து சூர்யா ரசிகர்கள் இந்த தகவலை கொண்டாடி வருகின்றனர். அனேகமாக ஜனவரி புத்தாண்டு அன்று அல்லது பொங்கல் அன்று இந்த படத்தின் டீசர் வெளியாக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது

சூர்யா, அபர்ணா பாலமுரளி, கருணாஸ், ஜாக்கி ஷெராப், மோகன்பாபு உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை சுதா கொங்காரா இயக்கியுள்ளார். சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு நிகேத் பொம்மிரெட்டி ஒளிப்பதிவும், சதீஷ் சூர்யா படத்தொகுப்பும் செய்து வருகின்றனர்.

More News

'அருவி' அதிதிபாலனா இது? ஆச்சரிய அதிர்ச்சியில் ரசிகர்கள்

கடந்த 2017ஆம் ஆண்டு அருண் பிரபு இயக்கத்தில் உருவான 'அருவி' என்ற திரைப்படத்தில் நடித்த அதிதிபாலனுக்கு வாழ்த்துக்கள் குவிந்தது என்பது தெரிந்ததே. எய்ட்ஸ் நோயாளியாகவும்

17 வயது இளம்பெண் மரணத்தில் துப்பு: ஒரே நேரத்தில் இருவரை காதலித்தது அம்பலம்

வேலூரை அடுத்த அரியூர்க்குப்பம் என்ற பகுதியைச் சேர்ந்த நிவேதா என்ற 17 வயது இளம்பெண் ஒருவர் தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து கொண்டிருந்த நிலையில் திடீரென

மனைவியுடன் ஒரு மணி நேரம் போனில் பேசிய கணவன் தூக்கில் தொங்கி தற்கொலை!

அகமதாபாத் சென்ற மனைவியுடன் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் போனில் பேசிய கணவர் திடீரென தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கன்னியாகுமரி மாவட்டத்தை

பிகினி உடை, பீச் ஊஞ்சல்:வைரலாகும் காஜல் சகோதரிகளின் புகைப்படம்

தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவர் காஜல்அகர்வால். இவர் அஜித்துடன் 'விவேகம்' விஜய்யுடன் 'ஜில்லா, மெர்சல், சூர்யாவுடன் 'மாற்றான்' மற்றும்

பாடகியாக மாறிய அஜித் மகள்! வைரலாகும் வீடியோ

தல அஜித் மற்றும் அஜித்தின் மனைவி ஷாலினி அஜித் ஆகிய இருவருமே திரைத்துறையை சேர்ந்தவர்கள் என்பதும் தெரிந்ததே. அஜித்தின் மனைவி ஷாலினி திருமணத்திற்கு