ஆஸ்கார் விருதை நெருங்கிவிட்டது 'சூரரை போற்று': சூர்யா ரசிகர்கள் கொண்டாட்டம்!

  • IndiaGlitz, [Friday,February 26 2021]

சூர்யா, அபர்ணா முரளி நடிப்பில், சுதாகொங்கரா இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் இசையில் உருவான ’சூரரைப்போற்று’ திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஓடிடியில் ரிலீஸ் ஆனது என்பதும் இந்தப்படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ஆஸ்கார் விருதின் பொதுப்பிரிவுக்கு இந்த படம் தேர்வு செய்யப்பட்டது என்பதும் சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இயக்குனர், சிறந்த இசை உள்பட ஒருசில பிரிவுகளுக்கு இந்த படம் போட்டி போட்டது என்பதும் தெரிந்ததே. இந்த தகவல் வெளியானதை அடுத்து சூர்யா ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருந்தனர்

இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி ஆஸ்கார் விருதுக்கு தகுதி பெற்ற 366 திரைப்படங்களில் ஒன்றாக ’சூரரைப்போற்று’ தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து சூர்யாவின் ’சூரரைப்போற்று’ திரைப்படம் ஆஸ்கார் விருதை நெருங்கி விட்டதாக கூறப்படுகிறது

சூர்யா மற்றும் அபர்ணா பாலமுரளி ஆகிய இருவரும் சிறந்த நடிகர் மற்றும் சிறந்த நடிகைக்கான பட்டியலில் இடம் பெற்றுள்ளனர் என்பதும், வரும் மார்ச் 15-ம் தேதி ஆஸ்கார் விருதுக்கு தகுதி பெறும் படங்களின் அடுத்த பட்டியல் வெளியாகும் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் அந்த பட்டியலில் ’சூரரைப்போற்று’ இடம் பெறுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.