ஐந்தாவது மொழியில் ரீமேக் ஆகும் சூர்யாவின் சூப்பர் ஹிட் படம்

  • IndiaGlitz, [Thursday,November 22 2018]

சூர்யா, அனுஷ்கா நடிப்பில் இயக்குனர் ஹரி இயக்கிய 'சிங்கம்' திரைப்படம் கடந்த 2010ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் ஆகியது. இந்த படத்தின் வெற்றியை அடுத்து 'சிங்கம் 2' மற்றும் 'சிங்கம் 3' ஆகிய படங்களும் வெளியானது. விரைவில் 'சிங்கம் 4' உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் 'சிங்கம்' திரைப்படம் இந்தியில் அஜய்தேவ்கான் நடிப்பில் உருவாகி பாலிவுட்டிலும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதேபோல் இந்த படம் கன்னடம் மற்றும் பெங்காலி மொழிகளிலும் ரீமேக் ஆனது

இந்த நிலையில் தமிழ், இந்தி, கன்னடம், பெங்காலியை அடுத்து தற்போது பஞ்சாபி மொழியிலும் ரீமேக் செய்யும் பணிகள் நடந்து வருகிறது. இந்த படத்தின் இணை தயாரிப்பாளராகிறார் நடிகர் அஜய்தேவ்கான் என்பது குறிப்பிடத்தக்கது.

நவானியத் சிங் இயக்கும் இந்த படத்தில் பர்மிஷ் வர்மா மற்றும் சோனம் பாஜ்வா முக்கிய வேடங்களில் நடிக்க ஹர்மீத்சிங் ஒளிப்பதிவு செய்யவுள்ளார்.

More News

மீண்டும் தனுஷுடன் இணையும் வரலட்சுமி?

நடிகர் தனுஷின் 'மாரி 2' படத்தில் நடிகை வரலட்சுமி, ஐஏஎஸ் அதிகாரி விஜயா என்ற கேரக்டரில் நடித்துள்ளார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த படம் வரும் கிறிஸ்துமஸ் திருநாள் விருந்தாக வெளிவரவுள்ளது.

பிரபுதேவா எடுத்த அடுத்த அவதாரம் இதுதான்

முதலில் நடன இயக்குனர், அடுத்ததாக நடிகர், பின்னர் இயக்குனர் என கோலிவுட் மட்டுமின்றி டோலிவுட், பாலிவுட் திரையுலகிலும் முத்திரை பதித்தவர் பிரபுதேவா.

புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 50 வீடுகள்: பிரபல நடிகர் அறிவிப்பு

கஜா புயலினால் பாதிப்பு அடைந்த டெல்டா பகுதி மக்களுக்கு திரையுலகினர் அளித்து வரும் உதவி மிகப்பெரிய அளவில் உள்ளது. கோடிகளிலும் லட்சங்களிலும் திரையுலகினர்

'நீயா 2' படத்தை ரிலீஸ் செய்யும் பிரபல நிறுவனம்

ஜெய், வரலக்ஷ்மி சரத்குமார், நடிக்கும் நீயா 2 படத்தின் தமிழ்நாட்டு உரிமத்தை புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனமும், விநியோக ஸ்டுடியோவுமான 'ஸ்கிரீன் சீன் மீடியா எண்டர்டெயின்மென்ட்' பெற்றுள்ளது.

ஹெலிகாப்டரில் தாழப்பறந்தாலும் இவை தெரியாது: முதல்வரை குத்திக்காட்டிய கமல்

சமீபத்தில் கஜா புயல் டெல்டா மாவட்டங்களை சிதறடித்து கடும் சேதங்களை உண்டாக்கிய நிலையில் நேற்றுமுன் தினம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஹெலிகாப்டரில்