சூர்யாவின் 'ரோலக்ஸ்' செய்த சாதனை: சமூக வலைத்தளங்களில் வைரல் புகைப்படம்!

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த’ விக்ரம்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் 400 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் இந்த படத்தில் ‘ரோலக்ஸ்’ என்ற கேரக்டரில் நடிகர் சூர்யா நடித்து இருந்தார் என்பதும் கடைசி ஐந்து நிமிடங்களில் மட்டுமே சூர்யாவின் ‘ரோலக்ஸ்’ கேரக்டர் தோன்றினாலும் அதற்கு மிகப்பெரிய வரவேற்பு ரசிகர் மத்தியில் இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் விக்ரம்’ படம் மாபெரும் வெற்றி பெற்றதை அடுத்து லோகேஷ் கனகராஜ்க்கு சொகுசுக்கார், உதவி இயக்குனர்களுக்கு பைக்குகளை பரிசாக வழங்கிய கமல்ஹாசன் சூர்யாவுக்கு தனது ரோலக்ஸ் வாட்சை பரிசாக வழங்கினார். இது குறித்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகியது.

இந்த நிலையில் இந்த புகைப்படம் இன்ஸ்டாகிராமில் 2 மில்லியன் லைக்ஸ் பெற்று சாதனை செய்துள்ளது. கோலிவுட் நடிகர் ஒருவரின் புகைப்படம் இன்ஸ்டாகிராமில் 2 மில்லியன் லைக்ஸ் பெறுவது இதுவே முதல்முறை என கூறப்படுகிறது.

கமல்ஹாசனின் ‘விக்ரம்’ திரைப்படம் வசூலில் மட்டுமின்றி லைக்ஸ்களிலும் சாதனை செய்து வருவதை அடுத்து படக்குழுவினர்களுக்கு ரசிகர்களின் பாராட்டு குவிந்து வருகிறது.