சூர்யாவின் 'ரெட்ரோ' ரிலீஸ் தேதி.. கார்த்திக் சுப்புராஜ் அறிவிப்பு..!

  • IndiaGlitz, [Wednesday,January 08 2025]

சூர்யா நடித்த ‘ரெட்ரோ’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து, கடந்த கிறிஸ்துமஸ் தினத்தில் டீசர் வெளியானது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில், தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதியை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ள நிலையில், சூர்யா ரசிகர்கள் உற்சாகம் ஆகியுள்ளனர்.

சூர்யாவின் ’கங்குவா’ திரைப்படம் கடந்த நவம்பர் மாதம் வெளியான நிலையில் அந்த படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இந்நிலையில், அவரது அடுத்த படமான ‘ரெட்ரோ’ மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. முதல் முறையாக சூர்யா மற்றும் கார்த்திக் சுப்புராஜ் இணைந்துள்ளதால், இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரொமான்ஸ் மற்றும் ஆக்ஷன் கலந்த இந்த படத்தில் சூர்யா இரட்டை இடத்தில் நடித்திருப்பதாகவும், இந்த படத்தில் பூஜா ஹெக்டே நாயகியாக நடித்திருப்பதாகவும் செய்திகள் வெளியானது.

இந்த நிலையில், இந்த படம் வரும் மே 1ஆம் தேதி தொழிலாளர் தினத்தில் வெளியாகும் என்று புதிய போஸ்டர் உடன் கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்டுள்ளார். அந்த பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தை, சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் மற்றும் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

மீண்டும் இணைகிறது 'மகாராஜா' கூட்டணி.. விஜய்சேதுபதிக்கு இன்னொரு வெற்றிப்படமா?

விஜய் சேதுபதி நடித்த 'மகாராஜா' திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. விஜய் சேதுபதியின் 50வது படமான 'மகாராஜா' படம் வெறும் ரூ.30 கோடியில் தயாராகி

குடும்ப வன்முறை.. நடிகை ஹன்சிகா மீது காவல்துறையில் புகார்..

நடிகை ஹன்சிகா மீது குடும்ப வன்முறை புகார் காவல்துறையில் வழங்கப்பட்டதாக  கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஸ்டார் விஜய்யில் வரும் பொங்கல் 2025 திருநாளை முன்னிட்டு புத்தம் புதிய திரைப்படங்கள்

தமிழ் தொலைக்காட்சிகளில் முன்னணி இடத்தை வகிக்கும் விஜய் டிவி, பண்டிகை காலங்களில் விறுவிறுப்பான திரைப்பட ஒளிபரப்புகளின் மூலம் தனது ரசிகர்களுக்கு பரபரப்பான அனுபவத்தை வழங்குகிறது

2025 சனி பெயர்ச்சி: உங்கள் ராசிக்கு என்ன பலன்? பரிகாரங்கள் என்ன?

பிரபல ஜோதிடர் வீனஸ் பாலாஜி, ஆன்மீக கிளிட்ஸ் சேனலில் 2025 ஆம் ஆண்டு மார்ச் 29 ஆம் தேதி நடைபெற உள்ள சனி பெயர்ச்சியால் 12 ராசிகளுக்கும் ஏற்படும் மாற்றங்களை விரிவாக விளக்கியுள்ளார்.

அகத்தியா பட முதல் சிங்கிள் பாடல் வெளியானது !! 

அகத்தியா படத்தின் முதல் சிங்கிள் பாடல் “காற்றின் வைரல்” வெளியிடப்பட்டது