சூர்யாவின் 'ரெட்ரோ' ரிலீஸ் தேதி.. கார்த்திக் சுப்புராஜ் அறிவிப்பு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சூர்யா நடித்த ‘ரெட்ரோ’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து, கடந்த கிறிஸ்துமஸ் தினத்தில் டீசர் வெளியானது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில், தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதியை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ள நிலையில், சூர்யா ரசிகர்கள் உற்சாகம் ஆகியுள்ளனர்.
சூர்யாவின் ’கங்குவா’ திரைப்படம் கடந்த நவம்பர் மாதம் வெளியான நிலையில் அந்த படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இந்நிலையில், அவரது அடுத்த படமான ‘ரெட்ரோ’ மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. முதல் முறையாக சூர்யா மற்றும் கார்த்திக் சுப்புராஜ் இணைந்துள்ளதால், இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரொமான்ஸ் மற்றும் ஆக்ஷன் கலந்த இந்த படத்தில் சூர்யா இரட்டை இடத்தில் நடித்திருப்பதாகவும், இந்த படத்தில் பூஜா ஹெக்டே நாயகியாக நடித்திருப்பதாகவும் செய்திகள் வெளியானது.
இந்த நிலையில், இந்த படம் வரும் மே 1ஆம் தேதி தொழிலாளர் தினத்தில் வெளியாகும் என்று புதிய போஸ்டர் உடன் கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்டுள்ளார். அந்த பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தை, சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் மற்றும் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
The One from May One !!#Retro in Cinemas Worldwide from May 1st 2025#LoveLaughterWar#TheOneMayOne pic.twitter.com/f6kDAp5cod
— karthik subbaraj (@karthiksubbaraj) January 8, 2025
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com