சூர்யா அடுத்த படத்தின் டீசர் ரிலீஸ்: இணையதளங்களில் வைரல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
சூர்யா நடிப்பில் பாலா இயக்கத்தில் உருவாகி வரும் ’சூர்யா 41’ படத்தின் படப்பிடிப்பு ஒரு பக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அவரது தயாரிப்பில் உருவான ’ஓ மை டாக்’ என்ற படம் ஏப்ரல் 21ஆம் தேதி அமேசான் ஓடிடியில் ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில் சற்று முன்னர் சூர்யா இந்த படத்தின் டீசர் வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த டீசரில் அருண்விஜய் மகன் அர்னவ் செல்லமாக வளர்க்கும் நாயுடன் இருக்கும் காட்சிகள் உள்ளன. ஒவ்வொரு காட்சியும் கவிதைபோல் ரசிக்கும் வகையில் உள்ள இந்த டீசர் வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
அர்னவ் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள இந்த படத்தில் விஜயகுமார் மற்றும் அருண்விஜய் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர் என்பதும், ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று தலைமுறையினர் இந்த படத்தில் நடித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சரத் சண்முகம் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது என்பது இந்த படமும் சூர்யாவின் முந்தைய படங்களான சூரரைப்போற்று மற்றும் ஜெய் பீம் படங்கள் போலவே ஓடிடியில் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
A furry tale of friendship, fun & unconditional love ????
— 2D Entertainment (@2D_ENTPVTLTD) April 8, 2022
Teaser out now!
Watch #OhMyDogOnPrime, April 21 @PrimeVideoIN@Suriya_offl #Jyotika @SarovShanmugam #VijayaKumar @arunvijayno1 #ArnavVijay #VinayRai @rajsekarpandian #MahimaNambiar @gopinath_dop @nivaskprasanna pic.twitter.com/Feb3UleW0l
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments