ஆணிவேர்ல இருந்து ஆரம்பிக்கிறதுதான் அழகு! 'என்.ஜி.கே' டிரைலர் விமர்சனம்

  • IndiaGlitz, [Monday,April 29 2019]

சூர்யா நடிப்பில் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'என்.ஜி.கே' திரைப்படத்தின் டிரைலர் மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்கு இடையே சற்றுமுன் வெளியாகியுள்ளது.

அரசியல், ஆக்சன் கலந்த இந்த படத்தின் இரண்டு நிமிட டிரைலரே இன்றைய அரசியல் சூழலை அழுத்தமாக கூறியிருப்பதால் படத்தில் இன்னும் பல விஷயங்களை எதிர்பார்க்கலாம்.

படிச்சவன் எல்லாம் ஒதுங்கி போறதனாலத்தான் நம்ம நாடே சுடுகாடா போயிருக்கு', 'நாம உண்மையிலேயே சுதந்திரத்தை பிரிட்டிஷ்காரன்கிட்ட இருந்து வாங்கி அரசியல்வாதிகிட்ட கொடுத்துட்டோம்', 'எந்த ஒரு பெரிய விஷயத்தை ஆரம்பிக்கிறதா இருந்தாலும் அதோட ஆணி வேர்ல இருந்துதான் ஆரம்பிக்கணும், 'அது ஒரு சுடுகாடு அதுக்குள்ள போனவன் பொணம்மாத்தான் வருவான்' போன்ற அழுத்தமான வசனங்களே இந்த படத்தின் எதிர்பார்ப்பை எகிற வைக்கின்றது

ஆக்சன் ஹீரோவுக்குள்ள மிடுக்குடன் கூடிய சூர்யாவின் நடிப்பும், யுவன்சங்கர் ராஜாவின் பின்னணி இசையும் டிரைலரை மீண்டும் மீண்டும் பார்க்க தோன்றுகிறது. சாய்பல்லவி, ரகுல் ப்ரித்திசிங் என இரண்டு ஹீரோயின்கள் இருந்தும் டிரைலரில் ரொமான்ஸ் இல்லை. படத்தில் இருக்கும் என நம்பலாம். ஆக்சன் காட்சிகளில் ஒளிப்பதிவாளர் சிவகுமார் விஜயனின் உழைப்பு தெரிகிறது. வழக்கமான செல்வராகவன் படங்களில் இருந்து கொஞ்சம் வேறுபட்டு ஆக்சன், கமர்ஷியல் இந்த படத்தில் தெரிகிறது. மொத்தத்தில் சூர்யா ரசிகர்கள் மட்டுமின்றி இன்றைய அரசியல் சூழல் அமைந்த படம் என்பதால் அனைத்து தரப்பினர்களையும் எதிர்பார்க்க வைத்துவிட்டது இந்த என்.ஜி.கே டிரைலர்