சூர்யாவின் 'என்.ஜி.கே' டீசர்: புதிய அப்டேட்

  • IndiaGlitz, [Friday,February 08 2019]

சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி வரும் 'என்.ஜி.கே.' திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து தற்போது முழுவீச்சில் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் டீசர் வரும் 14ஆம் தேதி வெளியாகவிருப்பதாக வெளிவந்த அறிவிப்பு குறித்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்

தற்போது வந்துள்ள புதிய தகவலின்படி 'என்.ஜி.கே' டீசருக்கான டப்பிங் பணியை சூர்யா முடித்துவிட்டார். இதனை தயாரிப்பு நிறுவனம் ட்ரீம்வாரியர் பிக்சர்ஸ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் புகைப்படத்துடன் உறுதி செய்துள்ளது. மேலும் 'என்.ஜி.கே' டீசர் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருவதாகவும், ரசிகர்களுக்கு இன்னும் ஒருவாரத்தில் விருந்து காத்திருப்பதாகவும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

சூர்யா, ரகுல் ப்ரித்திசிங், சாய்பல்லவி, பாலாசிங், மன்சூர் அலிகான், சம்பத்ராஜ், சரத்குமார், ஜெகபதிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ளார்.   யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்திற்கு சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவும், பிரவீண் கே.எல் படத்தொகுப்பு பணியும் செய்துள்ளனர். இந்த படம் வரும் ஏப்ரலில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News

நாளை முதல் ஓவியாவின் அடல்ட் பட டிரைலர்

பிக்பாஸ் புகழ் ஓவியா நடித்து வரும் படங்களில் ஒன்றான 90ml திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று

ஓவியாவின் '90ml' படத்தில் இரட்டை அர்த்த வசனங்கள்: இயக்குனர் தகவல்

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பெற்ற நடிகை ஓவியா தற்போது 'காஞ்சா 3', ''90ml' , களவாணி 2 போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

வருங்கால கணவருடன் செளந்தர்யா! வைரலாகும் புகைப்படம்

சூப்பர் ஸ்டார் ரஜினியின் இரண்டாவது மகளும் திரைப்பட இயக்குனருமான செளந்தர்யாவின் திருமணம் வரும் 11ஆம் தேதி நடைபெறவுள்ளது.

மீண்டும் இணையும் சிம்ரன், த்ரிஷா

கடந்த 1999ஆம் ஆண்டு வெளிவந்த 'ஜோடி' படத்தில் சிம்ரன் நாயகியாக நடிக்க அந்த படத்தில் அவருடைய தோழிகளில் ஒருவராக ஒரு சின்ன கேரக்டரில் த்ரிஷா நடித்திருப்பார்.

பாலாவின் 'வர்மா' படம் வெளியாகாது! அதிர்ச்சி அறிவிப்பு

தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலா இயக்கிய 'வர்மா' திரைப்படம் வெளியாகாது என அந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.