தீபாவளி ரிலீசில் இருந்து விலகுகிறதா 'என்.ஜி.கே?

  • IndiaGlitz, [Thursday,July 26 2018]

வரும் தீபாவளி திருநாளில் விஜய்யின் 'சர்கார்' மற்றும் சூர்யாவின் 'என்.ஜி.கே' ஆகிய இரண்டு படங்களும் வெளியாகும் என்று செய்திகள் வெளிவந்ததால் இருதரப்பு ரசிகர்களும் உற்சாகமாக இருந்தனர்.

இந்த நிலையில் சூர்யாவின் 'என்.ஜி.கே' தீபாவளிக்கு ரிலீஸ் ஆவது சந்தேகமே என்ற செய்தி வெளிவந்துள்ளது. 'என்.ஜி.கே' படத்தின் படப்பிடிப்பு சுமார் 60%க்கும் மேல் முடிந்துவிட்ட நிலையில் தொடர்ந்து படப்பிடிப்பு நடந்தால் நிச்சயம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆக வாய்ப்பு உள்ளது. ஆனால் திடீரென இந்த படத்தின் இயக்குனர் செல்வராகவனுக்கு உடல்நிலை சரியில்லை என்றும், அவர் ஒரு அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளதால் சில நாட்கள் அவர் ஓய்வில் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியதாகவும் தெரிகிறது. எனவே இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு காலதாமதம் ஆகும் என்று கூறப்படுகிறது.

இதன் காரணமாகவே 'என்.ஜி.கே' படத்தின் ரிலீஸ் தாமதமாகி இவ்வருட இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு வெளியாகும் என்று கூறப்படுகிறது. எனவே விஜய்யின் 'சர்கார்' தீபாவளி அன்று சோலோ ரிலீஸ் ஆக வாய்ப்பு அதிகம் உள்ளது.

More News

ஸ்ரீரெட்டியை வெளுத்து வாங்கிய தமிழ் நடிகை

தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி கடந்த சில நாட்களாக சென்னையில் தங்கியிருந்து கோலிவுட் திரையுலகினர் மீது பாலியல் குற்றச்சாட்டுக்களை கூறி வருகிறார்.

பள்ளி குழந்தைகளுக்கு வரலட்சுமி கொடுத்த இன்ப அதிர்ச்சி

சந்தோஷத்தில் பெரிய சந்தோஷம் பிறரை சந்தோஷப்படுத்தி பார்ப்பதுதான் என்று கூறுவதுண்டு. அந்த வகையில் நடிகை வரலட்சுமி சரத்குமார் பள்ளிக்குழந்தைகளை சந்தோஷப்படுத்தி சந்தோஷம் அடைந்துள்ளார். 

இவர்தான் கேப்டன் விஜயகாந்தின் மருமகளா?

கேப்டன் விஜயகாந்த்தின் மகன் சண்முகபாண்டியன் தமிழ் சினிமாவில் 'சகாப்தம்' என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். முதல் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும்

'கடைக்குட்டி சிங்கம்' படத்திற்கு எதிராக 'பீட்டா': திரையுலகினர் ஆவேசம்

கார்த்தி, சாயிஷா நடிப்பில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கிய 'கடைக்குட்டி சிங்கம்' திரைப்படத்தை குடும்பம் குடும்பமாக ரசிகர்கள் திரையரங்கில் கண்டு ரசித்து வருகின்றனர்

'ஜோக்கர்' குருசோமந்தரம் நடித்த அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி

இயக்குனர் ராஜூமுருகன் இயக்கத்தில் குருசோமசுந்தரம் நடித்த 'ஜோக்கர்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் தேசிய விருதினையும் பெற்றது