உன் ரத்தமும் என் ரத்தமும் ஒன்றா? சூர்யாவின் 'கங்குவா' டிரைலர்..!

  • IndiaGlitz, [Monday,August 12 2024]

சூர்யா நடித்த ‘கங்குவா’ திரைப்படம் வரும் அக்டோபர் 10ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

இரண்டரை நிமிடங்களுக்கும் மேலாக உள்ள இந்த டிரைலரில் பிரமாண்டமான கிராபிக்ஸ் காட்சிகள், சூர்யாவின் அட்டகாசமான நடிப்பு, வில்லன் பாபி தியோலின் ஆக்ரோஷம், தேவி பிரஸ் தேவி ஸ்ரீ பிரசாத்தின் பின்னணி இசை, சிறுத்தை சிவாவின் இயக்கம் என அனைத்து காட்சிகளும் புல்லரிக்கும் வகையில் இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஏற்கனவே ‘கங்குவா’ திரைப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்த நிலையில் தற்போது இந்த வீடியோ வெளியான பின்னர் மேலும் எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சூர்யா, திஷா பதானி, பாபி தியோல், நட்டி, ஜெகபதி பாபு, யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த்ராஜ், ஜி மாரிமுத்து, தீபா வெங்கட் மற்றும் கேஎஸ் ரவிகுமார் உள்பட பலர் நடித்துள்ளனர். வெற்றி பழனிசாமி ஒளிப்பதிவில், நிஷாத் யூசுப் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படம் சுமார் 350 கோடி செலவில் உருவாகியுள்ளது.

More News

சிவகார்த்திகேயன் - ஏஆர் முருகதாஸ் படத்தில் இணைந்த பிரபலம்.. சூப்பர் வீடியோ..!

சிவகார்த்திகேயன் நடிப்பில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் 'எஸ்.கே 23' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் மலையாள

'மகாராஜா' வெற்றி எதிரொலி.. 400 தியேட்டரில் ரீ ரிலீஸ் ஆன விஜய் சேதுபதி படம்..!

விஜய் சேதுபதி நடித்த 50வது திரைப்படமான 'மகாராஜா' சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படம் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை செய்தது என்பது தெரிந்தது. 

விஜே சித்ரா வழக்கில் கைது செய்யப்பட்ட கணவர்.. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!

தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்த விஜே சித்ரா தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த அவரது கணவர் உள்பட ஏழு பேரும் விடுதலை செய்யப்படுவதாக நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

உங்கள் ராசிக்கு கடவுள் எழுதிய விதி இதுதான்!

பிரபல ஜோதிடர் சுபாஷ் பாலகிருஷ்ணன், ஆன்மீகக்ளிட்ஸ் சேனலில் 12 ராசிகளுக்கான தலைவிதியை வெளிப்படுத்தியுள்ளார்.

உண்மையிலேயே நல்ல செய்தி சொன்ன இந்திரஜா.. ரோபோ சங்கர் குடும்பத்தினர் மகிழ்ச்சி..!

நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா திருமணம் கடந்த சில மாதங்களுக்கு முன் நடந்த நிலையில் அவர் தற்போது கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளதை அடுத்து ரோபோ சங்கர்