close
Choose your channels

சூர்யாவின் 'கங்குவா' குறித்த சூப்பர் தகவல்.. ரசிகர்கள் உற்சாகம்..!

Sunday, May 7, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் ‘கங்குவா’ என்ற படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக கடந்த சில நாட்களாக இந்த படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானலில் நடைபெற்றது என்பதும் அங்கு வரலாற்று சம்பந்தமான காட்சிகளின் படப்பிடிப்பு நடந்ததாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில் தற்போது ‘கங்குவா’ படத்தின் கொடைக்கானல் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாகவும் இதனை அடுத்து படக்குழுவினர் கொடைக்கானலில் இருந்து சென்னை திரும்பி விட்டதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற இருப்பதாகவும் அதற்காக பிரமாண்டமான செட் அமைக்க பணி நிறைவடையும் தருவாயில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இன்னும் ஒரு சில நாட்களில் ‘கங்குவா’ படத்தில் அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் தயாரிப்பில் மிக அதிக பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு வரும் ‘கங்குவா’ திரைப்படத்தில் சூர்யா பத்துக்கும் மேற்பட்ட கெட்டப்புகளில் நடித்துள்ளார். சூர்யா ஜோடியாக திஷா பதானி நடித்து வரும் இந்த படம் வெற்றி பழனிச்சாமி ஒளிப்பதிவில் நிஷாத் யூசுப் படத்தொகுப்பில் மதன் கார்க்கி வசனத்தில் உருவாகி வருகிறது. தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வரும் இந்த படம் சூர்யாவின் திரையுலக வாழ்வில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment