சூர்யாவின் 'கங்குவா' ரிலீஸ் எப்போது? தயாரிப்பு நிறுவனத்தின் முக்கிய அறிவிப்பு..!

  • IndiaGlitz, [Wednesday,September 18 2024]

நடிகர் சூர்யா நடித்த 'கங்குவா' திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் தொழில்நுட்ப பணிகள் முழுமையடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ள நிலையில் இந்த படம் முதலில் அக்டோபர் 10ஆம் தேதி ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதே தேதியில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'வேட்டையன்' திரைப்படம் வெளியாகவிருப்பதால், 'கங்குவா' படத்தின் வெளியீட்டு தேதி தள்ளிப்போகும் என்று செய்திகள் வந்தன.

இந்த நிலையில், 'கங்குவா' படத்தின் தயாரிப்பு நிறுவனம் ஸ்டுடியோ கிரீன், தனது சமூக வலைதளத்தில் ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், நாளை காலை 11 மணிக்கு 'கங்குவா' படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. இதையடுத்து, சூர்யா ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் நாளைய அறிவிப்புக்கு காத்திருக்கின்றனர்.

சூர்யாவின் திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகியிருக்கும் படம் 'கங்குவா'. இந்த படத்தை போட்டியின்றி தனியாக ரிலீஸ் செய்ய வேண்டும் என்று படக்குழுவினர் முடிவு செய்துள்ளார்கள். இதனால், அதிக திரையரங்குகளில் வெளியாகும் வாய்ப்பு உள்ளது.

இந்த படத்தில் சூர்யா, திஷா பதானி, பாபி தியோல், நட்டி, ஜெகபதி பாபு, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த்ராஜ், ஜி. மாரிமுத்து, தீபா வெங்கட் மற்றும் கே.எஸ். ரவிகுமார் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்க, வெற்றி பழனிசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். நிஷாத் யூசுப் படத்தொகுப்பில், சுமார் 350 கோடி ரூபாய் செலவில் உருவாகியுள்ள இந்தப் படம் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

More News

3 ஆண்டுகளாக ஒளிபரப்பான  விஜய் டிவியின் முக்கிய சீரியல்.. திடீரென முடிவடைவதால் அதிர்ச்சி..

விஜய் டிவியில் கடந்த மூன்று ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த ஒரு முக்கியமான சீரியல் திடீரென நிறைவடைய போவதாக வெளியான தகவல், பார்வையாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சன் டிவி சீரியலில் அறிமுகமாகும் தேசிய விருது பெற்ற இயக்குனர்.. அஜித்தின் 2 படங்களை இயக்கியவர்..!

அஜித்தின் இரண்டு படங்களை இயக்கிய, அதில் ஒன்றுக்காக தேசிய விருது பெற்ற பிரபல இயக்குநர் அகத்தியன் தற்போது சீரியல் நடிகராகியுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

விஜய்யின் 'கோட்' படத்தின் 13 நாள் வசூல்.. அதிகாரபூர்வமாக அறிவித்த அர்ச்சனா கல்பாத்தி..!

தளபதி விஜய் நடிப்பில் உருவான 'கோட்' திரைப்படம் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியான நிலையில் தற்போது, இப்படத்தின் 13 நாட்களின் வசூல் பற்றிய அதிகாரப்பூர்வ தகவலை தயாரிப்பாளர் அர்ச்சனா

மூன்று மாநிலங்கள், மூன்று கதைகள், பிரம்மாண்ட பான் இந்திய திரில்லர் திரைப்படம்

ஓல்ட் டவுன் பிக்சர்ஸ் மற்றும் பத்மஜா பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட்  தயாரிப்பில், ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில் இந்தியாவின் மிகப்பெரிய ஃபைனான்ஸியல் திரில்லராக, பிரம்மாண்டமான

2025-ம் ஆண்டு ராசிபலன் : உங்கள் ராசிக்கு என்ன பலன்கள்..?

பிரபல ஜோதிடர் ஆச்சார்யா ஹரிஷ் ராமன் அவர்கள், ஆன்மீகக்ளிட்ஸ் சேனலுக்கு அளித்த பேட்டியில், வருகின்ற 2025-ம் ஆண்டில் நடைபெற உள்ள முக்கியமான கிரக பெயர்ச்சிகள் மற்றும்