சூர்யாவின் 'கங்குவா' ரிலீஸ் தேதி இதுதான்: அதிகாரபூர்வ அறிவிப்பு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சூர்யா நடித்த ‘கங்குவா’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி இன்று காலை 11 மணிக்கு அறிவிக்கப்படும் என நேற்று வெளியான தகவலின்படி, சற்றுமுன் அதிகாரப்பூர்வமாக ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
சூர்யா நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில், தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் உருவாகிய ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, தற்போது இறுதிக்கட்ட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகின்றன.
‘கங்குவா’ திரைப்படம் அக்டோபர் 10ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், அதே தேதியில் ரஜினிகாந்த் நடித்த ’வேட்டையன்’ திரைப்படம் வெளியாகவிருப்பதால், ‘கங்குவா’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி போகும் என கூறப்பட்டது.
இந்த நிலையில், சற்றுமுன் வெளியான தகவலின்படி, ‘கங்குவா’ திரைப்படம் நவம்பர் 14ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ‘கங்குவா’ படத்தின் ப்ரோமோஷன் பணிகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சூர்யா, திஷா பதானி, பாபி தியோல், நட்டி, ஜெகபதி பாபு, யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த்ராஜ், ஜி மாரிமுத்து, தீபா வெங்கட் மற்றும் கேஎஸ் ரவிகுமார் உள்பட பலர் நடித்துள்ளனர். தேவிஸ்ரீ பிரசாத் இசையில், வெற்றி பழனிசாமி ஒளிப்பதிவில், நிஷாத் யூசுப் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படம் சுமார் 350 கோடி செலவில் உருவாகியுள்ளது.
The Battle of Pride and Glory, for the World to Witness ⚔🔥#Kanguva's mighty reign storms screens from 14-11-24 🤎#KanguvaFromNov14 🦅 @Suriya_offl @thedeol @directorsiva @DishPatani @ThisIsDSP #StudioGreen @GnanavelrajaKe @vetrivisuals @supremesundar @UV_Creations… pic.twitter.com/de3yYAL0BI
— Studio Green (@StudioGreen2) September 19, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments