close
Choose your channels

நிறைவு கட்டத்தை நெருங்கிய சூர்யாவின் 'கங்குவா' : இரண்டாம் பாகம் உருவாகுமா?

Thursday, May 4, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் ‘கங்குவா’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.

சூர்யாவின் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இதுவரை 80 நாட்களில் படப்பிடிப்பு முடிவடைந்து உள்ளதாகவும் இன்னும் 55 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும் வரும் செப்டம்பர் மாதத்திற்குள் இந்த படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்துவிடும் என்றும் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும்போதே இன்னொரு பக்கம் இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் என ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி முதல் பாகத்திற்கு ரசிகர்கள் மத்தியில் கிடைக்கும் வரவேற்பு பொருத்து இரண்டாம் பாகம் உருவாகும் என்றும் ஆனால் இரண்டாம் பாகத்திற்கான லீட் முதல் பாகத்தின் இறுதியில் இருக்கும் என்று கூறப்படுகிறது.

சூர்யாவின் திரையுலக வாழ்க்கையில் மிக அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு வரும் படம் ‘கங்குவா’ என்பதும் இந்த படம் 10 மொழிகளில் உருவாகிறது என்பது 10க்கும் மேற்பட்ட சூர்யா நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சூர்யா ஜோடியாக திஷா பதானி நடித்து வரும் இந்த படம் வெற்றி பழனிச்சாமி ஒளிப்பதிவில் நிஷாத் யூசுப் படத்தொகுப்பில் மதன் கார்க்கி வசனத்தில் உருவாகி வருகிறது. தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வரும் இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா மிகப்பெரிய பொருட்செலவில் தயாரித்து வருகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment