சூர்யாவின் 'கங்குவா' படத்திற்கு காலை 5 மணி காட்சிக்கு அனுமதியா? அரசின் அறிக்கை..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சூர்யா நடித்த ‘கங்குவா’ திரைப்படம் நாளை மறுநாள் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்திற்கு அதிகாலை 5 மணி காட்சிக்கு அனுமதி அளிக்க வேண்டும் என தயாரிப்பை தரப்பிலிருந்து அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இந்த கோரிக்கையை பரிசீலனை செய்த அரசு, அதன்பின் காலை 9 மணிக்கு முதல் காட்சி திரையிட்டு கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது. இது குறித்த அரசின் அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஸ்டுடியோ கிரீன் பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தினர் 14.11.2024 அன்று வெளியாகும், "கங்குவா" என்ற தமிழ்த் திரைப்படத்தை 14.11.2024 மற்றும் 15.11.2024 ஆகிய நாட்களுக்கு கூடுதலாக இரண்டு காட்சிகளை காலை 5 மணி முதல் இரவு 200 மணி வரை திரையிட. அனுமதி அளிக்கும்படி அரசைக் கோரியுள்ளனர்,
மேலே இரண்டாவதாக படிக்கப்பட்ட கடிதத்தில், கூடுதல் தலைமைச் செயலர்/ வருவாய் நிர்வாக ஆணையர். இந்நேர்வில், திரையாங்குகளில் சிறப்பு காட்சிகள் நடத்தும் நேரத்தை அதிகப்படுத்துவதால், சுகாதார குறைபாடுகள் மற்றும் கூட்ட நெரிசல் எதும் ஏற்படாமலும், திரைப்படம் காண்போரின் போக்குவரத்து பாதிக்கப்படாத வகையிலும், காவல் துறையினரின் ஒத்துழைப்பு மற்றும் பாதுகாப்பு பெறுவதற்கு தக்க ஏற்பாடுகள் செய்து கொள்ள வேண்டும் என்றும், மேலும், மக்கள் மற்றும் பார்வையாளர்கள் திரளாக உள்ளே வரவும், சிரமமின்றி வெளியேறவும், திரையரங்கத்தினை சுத்தம் செய்து சுகாதாரமாக பராமரிக்கவும், போதுமான இடம் மற்றும் கால இடைவெளியுடன், உரிய பாதுகாப்பு நடைமுறைகளுடன், ஸ்டுடியோ கிரீன் பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட், சென்னை நிறுவனத்தார் கோரிய "கங்குவா" தமிழ்த் திரைப்படத்திற்கு 14.11.2024 மற்றும் 15.11.2024 ஆகிய நாட்களுக்கு கூடுதலாக சிறப்பு காட்சிகளை காலை 5 மணிக்கு திரையிட அனுமதி வழங்குவது குறித்து, தமிழ்நாடு திரையரங்குகள் (ஒழுங்குமுறை) விதிகள், 1957-ன்படி உரிய விதிமுறைகளுக்குட்பட்டு, அரசளவில் முடிவெடுக்கலாம் என தெரிவித்துள்ளார்.
கூடுதல் தலைமைச் செயலாளர் / வருவாய் நிருவாக ஆணையரின் குறிப்புரையின் அடிப்படையில், ஸ்டுடியோ கிரீன் பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெ, நிறுவனத்தினரின் கோரிக்கையினை அரசு கவனமுடன் பரிசீலித்து, 14.11.2024 அன்று வெளியாகும், “கங்குவா” என்ற தமிழ்த் திரைப்படத்தை 14.11.2024 அன்று ஒரு நாள் மட்டும் கூடுதலாக ஒரு காட்சியினை காலை 9 மணி முதல் இரவு 200 மணி வரை (5 காட்சிகள் மட்டும்) திரையரங்குகளில் திரையிட 1955-ம் ஆண்டு, தமிழ்நாடு திரையரங்குகள் (ஒழுங்குமுறை) சட்டம், 11-ல் வழங்கப்பட்ட அதிகாரத்தின்படி, 1957-ம் ஆண்டு தமிழ்நாடு திரையரங்குகள் (ஒழுங்குமுறை) விதிகளில் உள்ள 'சி' படிவ நிபந்தனை 14 மற்றும் 14-A-வினை தளர்த்தி, இதுகுறித்து முன்கூட்டியேஉரிமம் வழங்கும் அதிகாரி மற்றும் சம்மந்தப்பட்ட கேளிக்கை வரி அதிகாரிக்கு தெரியப்படுத்த வேண்டும் என்ற நிபந்தனைக்குட்பட்டு, அனுமதிக்கலாம் என அரசு முடிவு செய்து, அவ்வாறே ஆணையிடுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments