இன்னும் 10 மாதங்கள் காத்திருக்கணுமா? சூர்யா ரசிகர்கள் அதிருப்தி..!

  • IndiaGlitz, [Saturday,July 01 2023]

சூர்யா நடித்து வரும் ’கங்குவா’ படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் கசிந்து உள்ள நிலையில் இன்னும் 10 மாதங்கள் காத்திருக்க வேண்டுமா? என்று சூர்யா ரசிகர்கள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.

சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் பிரம்மாண்டமான திரைப்படம் ’கங்குவா’. தமிழ் உள்பட 10 மொழிகளில் உருவாகி வரும் இந்த படம் இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய சூர்யா படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்னும் 60 நாட்கள் இந்த படத்தின் படப்பிடிப்பு நடத்த வேண்டும் என்று கூறப்படுகிறது. அதன் பிறகு நீண்ட நாட்கள் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பணிகள் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.

எனவே இந்த படம் அடுத்த ஆண்டு தமிழ் புத்தாண்டு விதமான ஏப்ரல் 14-ஆம் தேதி தான் வெளியிட திட்டமிடப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இன்றுதான் ஜூலை 1 பிறந்துள்ள நிலையில் இன்னும் 10 மாதங்கள் இந்த படத்திற்காக காத்திருக்க வேண்டுமா என்ற அதிருப்தி சூர்யா ரசிகர்கள் மனதில் ஏற்பட்டுள்ளது. ஆனாலும் காத்திருப்புக்கு ஏற்ப மிகப்பெரிய விருந்தாக இந்த படம் ரசிகர்களுக்கு இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் தயாரிப்பில் 10க்கும் மேற்பட்ட கெட்டப்புகளில் நடித்து வரும் சூர்யா ஜோடியாக திஷா பதானி நடித்து வருகிறார். வெற்றி பழனிச்சாமி ஒளிப்பதிவில் நிஷாத் யூசுப் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார்.