ஆதி நெருப்பே ஆறாத நெருப்பே.. 'கங்குவா' படத்தின் ஃபயர் பாடல் ரிலீஸ்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கங்குவா’ படத்தின் பாடல் சற்று முன் வெளியாகி உள்ள நிலையில் இந்த பாடல் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
சூர்யா நடித்த ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படம் அக்டோபர் 10ஆம் தேதி ஆயுத பூஜை விடுமுறை தினத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இரவு பகலாக இந்த படத்தின் பணிகள் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இன்று சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு ‘கங்குவா’ படத்தில் இடம்பெற்ற ஃபயர் பாடல் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சற்று முன் இந்த பாடல் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.
தேவி ஸ்ரீ பிரசாத் காம்போஸ் செய்த இந்த பாடலை விவேகா எழுதியுள்ளார் என்பதும் மகாலிங்கம், செந்தில் கணேஷ், செண்பகராஜ் மற்றும் தீப்தி சுரேஷ் ஆகிய நால்வரும் பாடியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த பாடல் முதல் முறை கேட்கும் போதே அட்டகாசமாக இருப்பதாக சூர்யா ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த பாடலின் முதல் சில வரிகள் இதோ
ஆதி நெருப்பே ஆறாத நெருப்பே
மாய நெருப்பே மலை நெருப்பே
பாயும் நெருப்பே பாதாள நெருப்பே
காவல் நெருப்பே காத்து நெருப்பு
மண் தோன்றா காலத்திலே
முன் தோன்றிய மூத்த குடி யாமே யாமே
எண் தோன்றா காலத்திலே
எண்ணிக்கை பார்த்திருக்கோமடி யாமே யாமே
சூர்யா, திஷா பதானி, பாபி தியோல், நட்டி, ஜெகபதி பாபு, யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த்ராஜ், ஜி மாரிமுத்து, தீபா வெங்கட் மற்றும் கேஎஸ் ரவிகுமார் உள்பட பலர் நடித்துள்ளனர். தேவிஸ்ரீ பிரசாத் இசையில், வெற்றி பழனிசாமி ஒளிப்பதிவில், நிஷாத் யூசுப் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படம் சுமார் 350 கோடி செலவில் உருவாகியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments