சூர்யா ரசிகர்களுக்கு அடுத்த விருந்து.. 'கங்குவா' அட்டகாசமான ஃபர்ஸ்ட் லுக்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று அதிகாலை 12.01 மணிக்கு அவர் நடித்து வரும் ‘கங்குவா’ என்ற படத்தையும் கிளிம்ஸ் வீடியோ வெளியானது என்பதும் இந்த வீடியோ மிகப்பெரிய அளவில் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது என்பதையும் பார்த்தோம்.
இந்த நிலையில் சூர்யாவின் பிறந்த நாளில் அவருடைய ரசிகர்களுக்கு இந்த வீடியோ விருந்தாக அமைந்த நிலையில் தற்போது ‘கங்குவா’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இரட்டை விருந்தாக அமைந்துள்ளது.
சூர்யா அட்டகாசமாக குதிரையில் வாளை கையில் ஏந்தி இருக்கும் இந்த போஸ்டர் பின்னணியில் போர் வீரர்கள் இருப்பது போன்று உள்ளது. அட்டகாசமாக இருக்கும் இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
சூர்யா ஜோடியாக திஷா பதானி நடிக்கும் இந்த படத்தில் யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்தராஜ், ஜெகபதி பாபு, நடராஜன் சுப்பிரமணியம், பாபி தியோல் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். ரூ.350 கோடி பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
A warrior. A leader. A King!#Kanguva🦅
— Studio Green (@StudioGreen2) July 23, 2023
Presenting you the #KanguvaFirstLook#GlimpseOfKanguva
▶️https://t.co/REvjXHt1cS#HappyBirthdaySuriya@Suriya_offl @DishPatani @directorsiva @ThisIsDSP @kegvraja @UV_Creations @KvnProductions @saregamasouth @vetrivisuals @supremesundar pic.twitter.com/MAPs7prTbw
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments