சூர்யாவின் 'கங்குவா' படத்தில் கார்த்தி.. வில்லனா? சிறப்பு தோற்றமா?
- IndiaGlitz, [Thursday,July 25 2024]
சூர்யா நடித்து முடித்துள்ள ‘கங்குவா’ திரைப்படத்தில் கார்த்தி சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பதாகவும் அவரது கேரக்டர் வில்லன் போல் வடிவமைக்கப்பட்டு அடுத்த பாகத்தில் அவரது கேரக்டருக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது
சூர்யா நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கங்குவா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் தற்போது திடீரென இந்த படத்தில் கார்த்தி இணைந்துள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கார்த்தி சம்பந்தப்பட்ட காட்சிகள் சமீபத்தில் படமாக்கப்பட்டதாகவும் படத்தின் இறுதி காட்சியில் கார்த்திக் தோன்றுவதாகவும் இந்த படத்தில் அவர் வில்லன் கேரக்டர் போல் நடித்தாலும் அடுத்த பாகத்தில் தான் அவரது கேரக்டருக்கு முக்கியத்துவம் இருக்கும் என்றும் ‘கங்குவா’ 2ஆம் பாகத்தில் சூர்யா மற்றும் கார்த்தி மோதும் காட்சிகள் அட்டகாசமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
நீண்ட நாட்களாக கார்த்தி மற்றும் சூர்யா ஆகிய இருவரும் ஒரே திரைப்படத்தில் இணைந்து நடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் தற்போது அந்த கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இருவரையும் முதல் முதலாக திரையில் பார்க்க இருதரப்பு ரசிகர்களும் ஆர்வத்துடன் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.