தீபிகாவும் இல்லை, கீர்த்தி சுரேஷூம் இல்லை.. 'STR 48' படத்தில் இவர்தான் நாயகி..!

  • IndiaGlitz, [Wednesday,May 24 2023]

சிம்பு நடிப்பில், தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில், உலகநாயகன் கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாக இருக்கும் ’STR 48’ என்ற படத்தில் தீபிகா படுகோனே அல்லது கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிப்பார் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது சூர்யாவின் ’கங்குவா’ படத்தின் நாயகி இடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

சிம்பு நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படமான ’STR 48’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கும் நிலையில் இந்த படத்திற்காக அவர் சிறப்பு உடற்பயிற்சி செய்ய லண்டன் சென்றுள்ளார். சிம்பு இந்தியா திரும்பி வந்தவுடன் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில் இந்த படத்தின் நாயகி குறித்த பேச்சுவார்த்தை கடந்த சில வாரங்களாக நடைபெற்று வருகிறது. முதலில் பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் இடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும் அதன் பின்னர் நடிகை கீர்த்தி சுரேஷிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும் கூறப்பட்டது

ஆனால் தற்போது வந்துள்ள தகவலின்படி ’கங்குவா’ நாயகி திஷா பதானி இடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் இந்த பேச்சுவார்த்தை முடிவடையும் நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வந்தால் மட்டுமே இந்த படத்தின் நாயகி யார் என்பது உறுதி செய்யப்படும்.

இந்த நிலையில் இந்த படத்தில் நடிக்கும் வில்லன் உட்பட மற்ற நடிகர் நடிகைகள் தேர்வுகளில் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இருப்பதாகவும் அதே போல் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வுகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.