சூர்யாவின் 'கங்குவா': சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட படக்குழு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சூர்யா நடிப்பில் உருவாகி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் சூப்பர் அறிவிப்பு ஒன்றை படக்குழுவினர் சற்றுமுன் வெளியிட்டுள்ள நிலையில் அந்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சூர்யாவின் பிறந்தநாள் வரும் 23ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கும் நிலையில் அன்றைய தினத்தில் ‘கங்குவா’ படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகலாம் என்று ஏற்கனவே செய்திகள் வெளியானது.
இந்த நிலையில் ஜூலை 24ஆம் தேதி ‘கங்குவா’ படத்தின் கிளிம்ஸ் வீடியோ வெளியாகும் என்று சற்று முன் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சூர்யாவின் சூப்பர் போஸ்டர் ஒன்று வெளியிட்டுள்ள நிலையில் அந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது
ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் தயாரிப்பில் 10க்கும் மேற்பட்ட கெட்டப்புகளில் நடித்து வரும் சூர்யா ஜோடியாக திஷா பதானி நடித்து வருகிறார். வெற்றி பழனிச்சாமி ஒளிப்பதிவில் நிஷாத் யூசுப் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார்.
Each scar carries a story!
— Studio Green (@StudioGreen2) July 20, 2023
The King arrives 👑#GlimpseOfKanguva on 23rd of July! @Suriya_offl @DishPatani @directorsiva @ThisIsDSP @StudioGreen2 @kegvraja @UV_Creations @saregamasouth@KanguvaTheMovie #Kanguva 🦅 pic.twitter.com/CV5iktmMHG
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com