'கங்குவா' கிளிம்ப்ஸ் வீடியோ எப்போது? சூர்யா ரசிகர்களுக்கு செம்ம சர்ப்ரைஸ்..!

  • IndiaGlitz, [Sunday,June 11 2023]

சூர்யா நடித்து வரும் ’கங்குவா’ என்ற படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகும் தேதி குறித்த தகவல் வெளியாகி உள்ளது

’கங்குவா’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு வரும் 20ஆம் தேதி தொடங்க இருப்பதாகவும் அதில் ஒரு பாடல் காட்சி படமாக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த பாடல் காட்சியை 8 நாட்கள் படமாக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

இதனை அடுத்து படக்குழுவினர் கொடைக்கானலுக்கு செல்ல இருப்பதாகவும் அங்கு பிளாஷ்பேக் சரித்திர காட்சிகளின் படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது

மேலும் இம்மாத இறுதியில் அல்லது அடுத்த மாதம் சூர்யாவின் பிறந்த நாளின் போது ப்ரோமோ அல்லது கிளிம்ப்ஸ் வீடியோ வெளியிட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் சூர்யா ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் தயாரிப்பில் 10க்கும் மேற்பட்ட கெட்டப்புகளில் நடித்து வரும் சூர்யா ஜோடியாக திஷா பதானி நடித்து வருகிறார். வெற்றி பழனிச்சாமி ஒளிப்பதிவில் நிஷாத் யூசுப் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார். சிறுத்தை சிவா இயக்கத்தில் ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படம் 3டி டெக்னாலஜியில் வெளியாகவுள்ளது.