தமிழில் ஒரு 'பாகுபலி'யா? 'கங்குவா' படத்திற்கு பிரபலம் கொடுத்த விமர்சனம்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சூர்யா நடித்த ‘கங்குவா’ திரைப்படம் வரும் நவம்பர் 14ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில், இந்த படத்தை பார்த்த திரையுலக பிரபலம் ஒருவர் தனது சமூக வலைத்தளத்தில் செய்த பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
கவிப்பேரரசு வைரமுத்துவின் மகன் மதன் கார்க்கி தனது சமூக வலைத்தளத்தில் ‘கங்குவா’ படம் குறித்து கூறியதாவது:
‘கங்குவா’ முழு படத்தையும் பார்த்தேன். டப்பிங் செய்யும் போது, ஒவ்வொரு காட்சியையும் நூற்றுக்கும் மேற்பட்ட முறை பார்த்திருந்தாலும், படத்தின் தாக்கம் ஒவ்வொரு முறையும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
மிகப்பெரிய விஷுவல் பிரம்மாண்டம், அழகான கோர்வையான காட்சிகள், சிறந்த கலை அம்சம், கதையின் ஆழம், இசையின் பிரம்மாண்டம், இவை அனைத்தும் சூர்யாவின் மிகச் சிறப்பான நடிப்புடன் இணைந்து, ஒரு மிகப்பெரிய படமாக உருவாகியுள்ளது. இந்த அதிசய அனுபவத்தை உருவாக்கிய இயக்குனர் சிறுத்தை சிவா அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி. மேலும், இந்த கனவை நனவாக்கிய ஸ்டூடியோ க்ரீன் நிறுவனத்திற்கும் எனது நன்றி," என்று தெரிவித்துள்ளார்.
மதன் கார்க்கியின் இந்த பதிவுக்கு பலர் "தமிழின் பாகுபலி" தான் ‘கங்குவா’ என்று கமெண்ட் செய்து வருவதை அடுத்து இந்த படத்தின் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.
Watched the full version of #Kanguva today. I’ve seen each scene more than a hundred times during the dubbing process, yet the impact of the movie grows with every viewing.
— Madhan Karky (@madhankarky) October 23, 2024
The grandeur of the visuals, the intricate detailing of the art, the depth of the story, and the majesty…
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments