'கங்குவா' படத்தின் சில காட்சிகளை பார்த்த பிரபலம்.. முதல் விமர்சனம் என்ன தெரியுமா?

  • IndiaGlitz, [Monday,June 05 2023]

’கங்குவா’ படத்தின் சில காட்சிகளை பார்த்ததாகவும் அந்த காட்சிகளை பார்த்து தான் மிரண்டு விட்டதாகவும் திரையுலக பிரபலம் ஒருவர் கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

சூர்யா நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் ’கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் பிளாஷ்பேக் காட்சிகளின் படப்பிடிப்பு விரைவில் நடைபெற இருப்பதாகவும் இதற்காக செட் அமைக்கும் பணிகள் நடந்து கொண்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ’கங்குவா’ படத்தின் சில காட்சிகளை தான் சமீபத்தில் பார்த்ததாக இந்த படத்திற்கு வசனம் எழுதிய மதன் கார்க்கி தெரிவித்துள்ளார். ’கங்குவா’ சிறுத்தை சிவாவின் ரெகுலர் படம் கிடையாது என்றும் அவர் இந்த படத்திற்காக மிகப்பெரிய அளவில் உழைத்து உள்ளார் என்றும் மிக அருமையாக இந்த படம் வந்திருப்பதாகவும் குறிப்பாக வசனங்கள் இந்த படத்தில் உண்மையில் சிறப்பாக வந்திருப்பதாகவும் கூறினார்.

சிறுத்தை சிவாவின் வழக்கமான படமாக இது இருக்காது என்றும் அவர் தன்னைத்தானே புதுப்பித்துக் கொண்ட படமாக தான் ’கங்குவா’ படம் இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். படத்தில் நிறைய புதிய விஷயங்கள் இருப்பதாகவும் சூர்யாவின் நடிப்பு, சிறுத்தை சிவா அவரை கையாண்டிருக்கும் விதம் என எல்லாமே புதுமையாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். மதன் கார்க்கியின் இந்த பேட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் தயாரிப்பில் 10க்கும் மேற்பட்ட கெட்டப்புகளில் நடித்து வரும் சூர்யா ஜோடியாக திஷா பதானி நடித்து வருகிறார். வெற்றி பழனிச்சாமி ஒளிப்பதிவில் நிஷாத் யூசுப் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார்.