பான் - உலக படமாகிறது சூர்யாவின் 'கங்குவா' ? எந்தெந்த மொழிகளில் ரீமேக் ஆகிறது தெரியுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் ‘கங்குவா’ படம் ஏற்கனவே தமிழ் உள்பட 10 இந்திய மொழிகளில் உருவாகி வருவதாக கூறப்படும் நிலையில் தற்போது சில வெளிநாட்டு மொழிகளில் டப் செய்ய இருப்பதாக கூறப்படுவதால் பான் - இந்தியா திரைப்படமாக இதுவரை கருதி வந்த ‘கங்குவா’ திரைப்படம், உலக திரைப்படமாக மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்று கூறப்படுகிறது.
சூர்யா நடிப்பில் உருவாகி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு தற்போது கொடைக்கானலில் நடைபெற்று வருகிறது . இந்த நிலையில் இந்த படத்திற்கு நாளுக்கு நாள் எதிர்பார்ப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. குறிப்பாக சமீபத்தில் வெளியான கிளிம்ப்ஸ் வீடியோவுக்கு பிறகு இந்த படத்தின் எதிர்பார்ப்பு உச்சத்திற்கு சென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தமிழ் உள்பட 10 இந்திய மொழிகளில் இந்த படம் உருவாகி வருவதாக கூறப்படும் நிலையில் தற்போது ஜப்பான், சீன மற்றும் கொரிய மொழிகளிலும் இந்த படம் டப் செய்யப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. எனவே இந்த படம் பான் - உலக திரைப்படமாக உருவாகும் என்றும் சூர்யாவுக்கு வேற லெவலில் இந்த படத்தின் வெற்றி இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
சூர்யா ஜோடியாக திஷா பதானி நடிக்கும் இந்த படத்தில் யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்தராஜ், ஜெகபதி பாபு, நடராஜன் சுப்பிரமணியம், பாபி தியோல் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். ரூ.350 கோடி பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்த படம் மிகவும் பிரமாண்டமாக உருவாகி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout