ரஜினியின் காணொளி.. விஜய்க்கு வாழ்த்து.. 'கங்குவா' இசை வெளியீட்டு துளிகள்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சூர்யா நடித்த ‘கங்குவா' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்த நிலையில், இந்த விழாவில் ரஜினிகாந்த் பேசிய காணொளி திரையிடப்பட்டது. அதுமட்டுமின்றி, சூர்யா பேசும்போது நடிகர் விஜய்யின் அரசியல் கட்சிக்கு தனது வாழ்த்துக்களை மறைமுகமாக தெரிவித்தார்.
சிறுத்தை சிவா இயக்கத்தில், சூர்யா நடிப்பில் வரும் நவம்பர் 14ஆம் தேதி வெளியாக இருக்கின்ற 'கங்குவா' படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடந்தது. இதில் பேசிய காணொளி மூலம் ரஜினிகாந்த் கூறியதாவது:
’அண்ணாத்த’ படத்தின் ஷூட்டிங்கின் போதே, எனக்காக வரலாற்றுப் படம் ஒன்றை சிவாவிடம் எழுதச் சொன்னேன். அதைப் பற்றி யோசிப்பதாகச் சொன்னார் சிவா. அதன்படி பார்த்தால், ‘கங்குவா' எனக்காக எழுதப்பட்ட கதைதான். ஒருவேளை இதை ஞானவேல் ராஜாவிடம் கூறும்போது, நன்றாக இருப்பதால் சூர்யாவிற்கு பண்ணிவிட்டார்கள் என நினைக்கிறேன் என்று தெரிவித்தார்.
அதன்பின் இந்த விழாவில் சூர்யா பேசும் போது, "உதயநிதி ஸ்டாலின் என்னுடைய காலேஜ் ஜூனியர் இருந்தாலும், நான் அவரை பாஸ் என்று தான் அழைப்பேன். அவர் என்னை வைத்து இரண்டு படங்கள் எடுத்துள்ளார், துணை முதலமைச்சர் ஆகியுள்ளார். அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்; அவரை எப்போதும் யாரும் எளிதாக அணுகலாம்," என்று தெரிவித்தார். அதேபோல், "என்னுடைய இன்னொரு நண்பர் இருக்கிறார். அவர் புதிய பயணத்திற்காக புதிய பாதை போட்டு இருக்கிறார்; அவருடைய வரவும் நல்வரவாக இருக்கட்டும்," என்று விஜய்க்கு மறைமுகமாக வாழ்த்து கூறினார்.
‘கங்குவா' படம் குறித்து சூர்யா கூறியபோது, "இது ஒரு பெரிய தலைவாழை விருந்து. மலை உச்சியில் இருக்கும் கொம்புத்தேனாகவும், எட்டாக்கனியாகவும் இந்த படத்தை பார்க்கலாம். மேலும் தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு நேரத்தை வீணாக்க வேண்டாம். என்ன வெறுப்பு கொடுத்தாலும் அன்பை மட்டும் பரிமாறி உயர்வோம்," என்று கூறினார்.
மேலும், "சினிமா என்பது ஒரு பொழுதுபோக்குக்கு மட்டுமல்ல; அது ஒரு குரல். சினிமாவை நாம் நிச்சயம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். 27 ஆண்டுகளுக்கு பிறகு சிவா எடுத்த இந்த பொக்கிஷத்தில் இருக்கும் காட்சிகள் எனக்கு புதிதாக இருக்கின்றன. தமிழ் சினிமாவை முன்னிலைக்கு கொண்டு செல்லும் அத்தனை உழைப்பையும் இந்த படத்தில் நாங்கள் அனைவரும் காட்டியுள்ளோம்," என்று கூறினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout