ரஜினியின் காணொளி.. விஜய்க்கு வாழ்த்து..  'கங்குவா' இசை வெளியீட்டு துளிகள்..!

  • IndiaGlitz, [Sunday,October 27 2024]

சூர்யா நடித்த ‘கங்குவா' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்த நிலையில், இந்த விழாவில் ரஜினிகாந்த் பேசிய காணொளி திரையிடப்பட்டது. அதுமட்டுமின்றி, சூர்யா பேசும்போது நடிகர் விஜய்யின் அரசியல் கட்சிக்கு தனது வாழ்த்துக்களை மறைமுகமாக தெரிவித்தார்.

சிறுத்தை சிவா இயக்கத்தில், சூர்யா நடிப்பில் வரும் நவம்பர் 14ஆம் தேதி வெளியாக இருக்கின்ற 'கங்குவா' படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடந்தது. இதில் பேசிய காணொளி மூலம் ரஜினிகாந்த் கூறியதாவது:

’அண்ணாத்த’ படத்தின் ஷூட்டிங்கின் போதே, எனக்காக வரலாற்றுப் படம் ஒன்றை சிவாவிடம் எழுதச் சொன்னேன். அதைப் பற்றி யோசிப்பதாகச் சொன்னார் சிவா. அதன்படி பார்த்தால், ‘கங்குவா' எனக்காக எழுதப்பட்ட கதைதான். ஒருவேளை இதை ஞானவேல் ராஜாவிடம் கூறும்போது, நன்றாக இருப்பதால் சூர்யாவிற்கு பண்ணிவிட்டார்கள் என நினைக்கிறேன் என்று தெரிவித்தார்.

அதன்பின் இந்த விழாவில் சூர்யா பேசும் போது, உதயநிதி ஸ்டாலின் என்னுடைய காலேஜ் ஜூனியர் இருந்தாலும், நான் அவரை பாஸ் என்று தான் அழைப்பேன். அவர் என்னை வைத்து இரண்டு படங்கள் எடுத்துள்ளார், துணை முதலமைச்சர் ஆகியுள்ளார். அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்; அவரை எப்போதும் யாரும் எளிதாக அணுகலாம், என்று தெரிவித்தார். அதேபோல், என்னுடைய இன்னொரு நண்பர் இருக்கிறார். அவர் புதிய பயணத்திற்காக புதிய பாதை போட்டு இருக்கிறார்; அவருடைய வரவும் நல்வரவாக இருக்கட்டும், என்று விஜய்க்கு மறைமுகமாக வாழ்த்து கூறினார்.

‘கங்குவா' படம் குறித்து சூர்யா கூறியபோது, இது ஒரு பெரிய தலைவாழை விருந்து. மலை உச்சியில் இருக்கும் கொம்புத்தேனாகவும், எட்டாக்கனியாகவும் இந்த படத்தை பார்க்கலாம். மேலும் தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு நேரத்தை வீணாக்க வேண்டாம். என்ன வெறுப்பு கொடுத்தாலும் அன்பை மட்டும் பரிமாறி உயர்வோம், என்று கூறினார்.

 

 

 

மேலும், சினிமா என்பது ஒரு பொழுதுபோக்குக்கு மட்டுமல்ல; அது ஒரு குரல். சினிமாவை நாம் நிச்சயம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். 27 ஆண்டுகளுக்கு பிறகு சிவா எடுத்த இந்த பொக்கிஷத்தில் இருக்கும் காட்சிகள் எனக்கு புதிதாக இருக்கின்றன. தமிழ் சினிமாவை முன்னிலைக்கு கொண்டு செல்லும் அத்தனை உழைப்பையும் இந்த படத்தில் நாங்கள் அனைவரும் காட்டியுள்ளோம், என்று கூறினார்.

More News

விஜய் அறிவுரையை மதிக்காத தொண்டர்கள்.. விபத்தில் ஒருவர் பரிதாப பலி..!

தமிழக வெற்றி கழகத்தின் மாநாடு இன்று விழுப்புரம் அருகே விக்கிரவாண்டியில் நடைபெற்று வரும் நிலையில், இந்த மாநாட்டிற்கு இருசக்கர வாகனத்தில்

என்னால் சரிவர நினைவுகூர கூட முடியவில்லை.. ரஜினி பாராட்டு குறித்து பிரபல இயக்குனர்..!

சமீபத்தில் வெளியான திரைப்படத்தை பார்த்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாராட்டிய நிலையில் அவருடைய பாராட்டை என்னால் படம் பிடிக்க முடியவில்லை,

ஜெயிப்பதெல்லாம் ஒரு விஷயமா? விளையாட்டு சுவாரஸ்யமா இருக்கணும்: வறுத்தெடுத்த விஜய்சேதுபதி..!

விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி இன்று 20வது நாளாக ஒளிபரப்பாக இருக்கும் நிலையில், இன்றைய அடுத்த புரோமோவில் விஜய் சேதுபதி ஆண்கள் டீமை வறுத்தெடுக்கும் காட்சிகள் இருப்பதால்,

இந்திய ராணுவ வீரர்களுக்காக ஸ்பெஷல் காட்சி.. கண்கலங்க வைத்த 'அமரன்'..!

சிவகார்த்திகேயன் நடித்த 'அமரன்' திரைப்படம் தீபாவளி அன்று மிகவும் பிரம்மாண்டமாக வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

எனக்கு சாக்லேட், இனிப்புகள் பரிசாக கிடைத்தது: பாலாவின் 4வது திருமணம் குறித்து 3வது மனைவி..!

நடிகர் பாலா சமீபத்தில் தனது உறவினர் பெண்ணை நான்காவது திருமணம் செய்து கொண்ட நிலையில், அவரது மூன்றாவது மனைவி டாக்டர் எலிசபெத் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட வீடியோவில்