சூர்யாவின் 'சிறுக்கி சிங்கிள்' ரிலீஸ் தேதி அறிவிப்பு

  • IndiaGlitz, [Wednesday,July 03 2019]

சூர்யாவின் என்.ஜி.கே' சமீபத்தில் வெளியான நிலையில் அவர் தற்போது 'காப்பான்' மற்றும் 'சூரரை போற்று' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் 'காப்பான்' திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

இந்த நிலையில் சற்றுமுன் 'காப்பான்' திரைப்படத்தின் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவாகியுள்ள 'சிறுக்கி' என்ற தொடங்கும் இந்த சிங்கிள் பாடல் வரும் 5ஆம் தேதி வெளியாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கே.வி.ஆனந்த், சூர்யா, ஹாரீஸ் ஜெயராஜ் மீண்டும் இணைந்த கூட்டணியில் உருவாகியிருக்கும் இந்த பாடல் நிச்சயம் சூப்பர் ஹிட்டாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

சூர்யா, மோகன்லால், சாயீஷா, ஆர்யா, பொமன் இரானி, சமுத்திரக்கனி, பூர்ணா, பிரேம், தலைவாசல் விஜய், உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை லைகா நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறது. இந்த படம் வரும் ஆகஸ்ட் 30ஆம் தேதி ரிலீஸ் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

More News

ஓய்வு பெறுகிறார் தல தோனி: ரசிகர்கள் அதிர்ச்சி

உலகின் மிகச்சிறந்த விக்கெட் கீப்பர், மிகச்சிறந்த மேட்ச் ஃபினிஷர், இந்தியாவுக்காக உலகக்கோப்பை உள்பட பல கோப்பைகளை பெற்று தந்தவர் உள்பட பல பெருமைகளுக்கு சொந்தக்கார் தல தோனி

ஜோதிகாவின் அடுத்த படத்தின் சென்சார் தகவல்

ஜோதிகா நடித்த 'ராட்சசி' திரைப்படம் யூ சான்றிதழ் பெற்று நாளை மறுநாள் அதாவது ஜூலை 5ஆம் தேதி வெளியாகவுள்ளது.

எங்க செல்லத்த கோபப்பட வச்சது எவண்டா? பொங்கி எழுந்த லாஸ்லியா ஆர்மி

பிக்பாஸ் வீட்டில் நடக்கும் கூத்துக்களையும் சண்டைகளையும் பிரச்சனைகளையும் அமைதியாக கவனித்து கொண்டு அதே நேரத்தில் எந்த பிரச்சனையிலும் தலையிடாமல் ஜாலியாக இருக்கும்

பாட்டில்கேப் சேலஞ்சில் தமிழ் ஆக்சன் நடிகர்

இணையத்தில் அவ்வப்போது ஒரு சேலஞ்ச் வைரலாகி வருவது தெரிந்ததே. அந்த வகையில் ஐஸ் பக்கெட் சேலஞ்ச் , கிகி சேலஞ்ச் உள்பட பல சேலஞ்ச்சுக்கள் வைரலாகியுள்ள நிலையில்

மாஸ் நடிகர்களுக்கு இணையாக சமந்தாவுக்கு கட்-அவுட்: கெத்து காட்டும் ரசிகர்கள்

அஜித், விஜய், சூர்யா போன்ற மாஸ் நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாக்கும்போது அவர்களது ரசிகர்கள் திரையரங்குகளில் விண்ணை முட்டும் கட் அவுட்டுக்களை வைத்து அசத்துவது தெரிந்ததே.