சூர்யாவுக்கு அட்டகாசமான பிறந்த நாள் பரிசு தந்த லைக்கா நிறுவனம்

  • IndiaGlitz, [Wednesday,July 17 2019]

நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குநர் கேவி ஆனந்த் இயக்கத்தில் லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள பிரம்மாண்டமான திரைப்படம் 'காப்பான்'. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது

இந்த நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா தேதி குறித்த அறிவிப்பு இன்று காலை வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி சற்று முன் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா ஜூலை 21ம் தேதி நடைபெறும் என லைக்கா நிறுவனம் தனது சமூக வலைப் பக்கத்தை அறிவித்துள்ளது. சூர்யாவின் பிறந்தநாள் ஜூலை 23ம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில் அவரது பிறந்த நாள் பரிசாக 'காப்பான்' படத்தின் பாடல்களை லைக்கா நிறுவனம் வெளியிடவுள்ளது.

சூர்யா, மோகன்லால், சாயீஷா, ஆர்யா, பொமன் இரானி, சமுத்திரக்கனி, பூர்ணா, பிரேம், தலைவாசல் விஜய், உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை படத்திற்கு எம்எஸ் பிரபு மற்றும் அபிநந்தன் ராமானுஜன் ஒளிப்பதிவு செய்துள்ளனர். அந்தோணி படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை இந்த படத்திற்கு பட்டுக்கோட்டை பிரபாகர் மற்றும் கபிலன் வைரமுத்து ஆகியோர் வசனம் எழுதியுள்ளனர்.

More News

காஜல் அகர்வாலுக்கு கிடைத்த இரட்டை சந்தோஷம்

தமிழ், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான காஜல் அகர்வால், ஜெயம் ரவியுடன் நடித்த 'கோமாளி' திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினத்தில் வெளியாக உள்ளது

பாசாங்கு செய்வது யார்? மிராவை சுற்றி வளைத்த போட்டியாளர்கள்

பிக்பாஸ் வீட்டில் மீராமிதுன் எப்படி ஒவ்வொருவரையும் குறி வைக்கிறாரோ அதேபோல் போட்டியாளர்கள் ஒட்டுமொத்தமாக சேர்ந்து மீராவை குறி வைத்து வருகின்றனர்.

தம்பி சூர்யாவுக்கு ஆதரவு கொடுத்த அண்ணன் கமல்ஹாசன்

நடிகர் சூர்யா சமீபத்தில் புதிய கல்விக்கொள்கை குறித்த பேசியது கடந்த இரண்டு நாட்களாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அனிருத் வெளியிட்ட விஷ்ணு விஷாலின் எஃப்ஐஆர்

நடிகர் விஷ்ணு விஷால் ஏற்கனவே 'ஜகஜ்ஜால கில்லாடி' மற்றும் 'இன்று நேற்று நாளை 2' ஆகிய இரண்டு படங்களில் நடித்து வரும் நிலையில் அவர் சமீபத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமானார்

முடிவுக்கு வந்தது சிவகார்த்திகேயனின் அடுத்த பட படப்பிடிப்பு 

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது இயக்குனர்கள் பாண்டிராஜ், விக்னேஷ் சிவன், மற்றும் ரவிக்குமார் ஆகியவர்களின் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள நிலையில்