சென்னை புத்தக கண்காட்சியில் 'ஜெய்பீம்': சூர்யா கூறிய சூப்பர் தகவல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
சூர்யா நடித்த ‘ஜெய்பீம்’ திரைப்படம் கடந்த 2021ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது சென்னை புத்தகக் கண்காட்சியிலும் இந்த படம் இடம்பெறப் போவதாக சூர்யா சற்று முன் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.
சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் புத்தகக் கண்காட்சி நடைபெறும் என்பதும், இதனை லட்சக்கணக்கான மக்கள் கண்டு ரசிப்பார்கள் என்பதும் தெரிந்ததே. இந்த வகையில் 46வது சென்னை சர்வதேச புத்தக கண்காட்சியை ஒய்எம்சிஏ மைதானத்தில் நாளை முதல் தொடங்க இருக்கிறது.
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் இந்த புத்தக கண்காட்சியை தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் பள்ளி கல்வித்துறை அமைச்சருக்கு அன்பில் பொய்யாமொழி கலந்து கொள்ள இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த நிலையில் சூர்யா நடித்த ‘ஜெய்பீம்’ படத்தின் திரைப்பட கலைஞர்கள் உரையாடலுடன் இந்த படத்தின் திரைக்கதையை நூலாக அருஞ்சொல் ஆசிரியர் சமஸ் என்பவர் கொண்டு வந்துள்ளார். அவரும் 2டி என்டர்டைன்மென்ட் நிறுவனமும் இணைந்து 2023 ஆம் ஆண்டு சென்னை புத்தக கண்காட்சிக்கு ஜெய்பீம் நூலை வெளியிட உள்ளது.
இதுகுறித்து சூர்யா தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது: ஜெய்பீம் திரைப்படத்தின் தொழில்நுட்ப கலைஞர்களின் உரையாடலுடன், படத்தின் திரைக்கதையை நூலாக கொண்டு வந்திருக்கிறார் அருஞ்சொல் ஆசிரியர் சமஸ்.
அருஞ்சொல் மற்றும் 2டி எண்டர்டெயின்மெண்ட் இணைந்து 2023 சென்னை புத்தகக்காட்சிக்குக் கொண்டுவரும் ஜெய்பீம் நூலின் அட்டையை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி.
இந்த புத்தகத்தை கையில் வைத்துள்ள புகைப்படத்தை நடிகர் சூர்யா தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ள நிலையில் இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது. சென்னை புத்தகக் கண்காட்சியில் ‘ஜெய்பீம்’ திரைக்கதையுடன் கூடிய நூல் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெய்பீம் திரைப்படத்தின் தொழில்நுட்ப கலைஞர்களின் உரையாடலுடன், படத்தின் திரைக்கதையை நூலாக கொண்டு வந்திருக்கிறார் அருஞ்சொல் ஆசிரியர் சமஸ். @arunchol – #2DEntertainment இணைந்து 2023 சென்னை புத்தகக்காட்சிக்குக் கொண்டுவரும் ஜெய்பீம் நூலின் அட்டையை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி. pic.twitter.com/tkwI5k6daA
— 2D Entertainment (@2D_ENTPVTLTD) January 5, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments