சூர்யாவின் 'ஜெய்பீம்': தாதா சாகேப் பால்கே விருதுகளை அடுத்து மேலும் 2 விருதுகள்!

  • IndiaGlitz, [Thursday,May 05 2022]

சூர்யா நடிப்பில் ஞானவேல் இயக்கத்தில் உருவான ‘ஜெய்பீம்’ திரைப்படத்திற்கு தாதா சாகேப் பால்கே விருதுகள் வழங்கப்பட்டன என்பதும் சிறந்த படம் மற்றும் சிறந்த துணை நடிகர் விருது அறிவிக்கப்பட்டது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம் .

இந்த நிலையில் தற்போது ‘ஜெய்பீம்’ திரைப்படத்திற்கு மேலும் இரண்டு விருதுகள் கிடைத்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாஸ்டன் சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்ற ‘ஜெய்பீம்’ திரைப்படத்திற்கு சிறந்த ஒளிப்பதிவாளர் மற்றும் சிறந்த நடிகை விருது கிடைத்துள்ளது.

‘ஜெய்பீம்’ பட்த்தின் ஒளிப்பதிவாளர் எஸ்.ஆர்.கதிருக்கு சிறந்த ஒளிப்பதிவாளர் விருதும், சிறந்த நடிகைக்கான விருது லிஜோமால் ஜோஸ்க்கும் கிடைத்துள்ளன. இதனை அடுத்து படக்குழுவினர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.