சூர்யாவின் 'ஜெய் பீம்' ரிலீஸ் தேதி அறிவிப்பு!
Send us your feedback to audioarticles@vaarta.com
சூர்யா நடித்து வந்த ‘ஜெய் பீம்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் சமீபத்தில் முடிவடைந்த நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து சூர்யா ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.
சூர்யா நடிப்பில் தா.செ. ஞானவேல் என்பவரின் இயக்கத்தில் உருவாகிய ‘ஜெய் பீம்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது தெரிந்ததே. இந்த படத்தின் நாயகியாக ரஷிஜா விஜயன் மற்றும் முக்கிய வேடங்களில் பிரகாஷ்ராஜ், மணிகண்டன் உள்பட பலர் நடித்துள்ளனர் என்பதும் சீன் ரோல்டன் இசையமைப்பில் உருவான இந்த படத்திற்கு எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவும், ஃபிலோமின் ராஜ் படத்தொகுப்பும் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த படம் வரும் நவம்பர் 2-ம் தேதி அமேசான் ஓடிடியில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த போஸ்டர் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ள நிலையில் இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது என்பதும் இந்த போஸ்டர் மூலம் சூர்யா இந்தப் படத்தில் வழக்கறிஞர் கேரக்டரில் நடித்திருக்கிறார் என்பதும் தெரியவருகிறது.
ஏற்கனவே சூர்யா தயாரிப்பில் ஜோதிகா நடிப்பில் உருவான ’உடன்பிறப்பே’ திரைப்படம் அக்டோபர் 14ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் இரண்டே வார இடைவெளியில் ஒளிப்பதிவு படமும் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
The ultimate fight against injustice unfolds on Nov 2.
— 2D Entertainment (@2D_ENTPVTLTD) October 1, 2021
Watch #JaiBhimOnPrime, this Diwali, Nov 2. @PrimeVideoIN @Suriya_offl #Jyotika @tjgnan @prakashraaj @RSeanRoldan @srkathiir @KKadhirr_artdir @philoedit @rajisha_vijayan #Manikandan @jose_lijomol pic.twitter.com/1rCHb8VMhv
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments