'சூர்யாவின் 'எதற்கும் துணிந்தவன்' படத்தின் அப்டேட்: சன் பிக்சர்ஸ் அறிவிப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
சூர்யா நடிப்பில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள திரைப்படம் ’எதற்கும் துணிந்தவன்’ இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என இயக்குனர் பாண்டிராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்து இருந்தார் என்பதும் தற்போது இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் ’எதற்கும் துணிந்தவன்’ படத்தின் அப்டேட் நாளை மதியம் 12 மணிக்கு வெளியாகும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இதனை அடுத்து சூர்யாவின் ரசிகர்கள் இந்த அப்டேட்டை மிகப்பெரிய ஆவலுடன் காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடதக்கது
ஏற்கனவே சூர்யா நடித்த ’சூரரைப்போற்று’ மற்றும் ’ஜெய்பீம்’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் சூப்பர் ஹிட் ஆகியுள்ள நிலையில் ’எதற்கும் துணிந்தவன்’ திரைப்படம் ஹாட்ரிக் வெற்றியாக மாறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
சூர்யா, பிரியங்கா மோகன், சத்யராஜ், ராஜ்கிரண், சரண்யா பொன்வண்ணன், சூரி, எம்எஸ் பாஸ்கர், ஜெயப்பிரகாஷ், தேவதர்ஷினி உள்பட பலர் நடித்த இந்த திரைப்படத்திற்கு டி இமான் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
#ETupdate Tomorrow @ 12 PM!
— Sun Pictures (@sunpictures) November 18, 2021
Kaathiruppom ??@Suriya_offl @pandiraj_dir #Sathyaraj #SaranyaPonvannan #MSBhaskar @immancomposer @RathnaveluDop @priyankaamohan @sooriofficial @VijaytvpugazhO #Ramar #EtharkkumThunindhavan pic.twitter.com/hyLeZblzt5
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Megha
Contact at support@indiaglitz.com
Comments