சூர்யாவின் 'எதற்கும் துணிந்தவன்' டிரைலர் குறித்த முக்கிய தகவல்!

  • IndiaGlitz, [Friday,February 11 2022]

சூர்யா நடித்த ’எதற்கும் துணிந்தவன்’ திரைப்படம் மார்ச் 10ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தின் டிரைலர் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது

இந்த படத்தின் டிரைலர் சென்சார் ஆகி விட்டதாகவும் 2 நிமிடங்கள் 15 வினாடிகள் ஓடும் இந்த டிரைலர் ’யூஏ’ சான்றிதழ் பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. ’எதற்கும் துணிந்தவன்’ படத்தின் டிரைலரை சூர்யாவின் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கும் நிலையில் இந்த டிரைலர் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சூர்யா ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ள இந்த படத்தில் சத்யராஜ், ராஜ்கிரண், சரண்யா பொன்வண்ணன், சூரி, எம்எஸ் பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். டி இமான் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தை பாண்டிராஜ் இயக்கியுள்ளார் என்பதும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.