சூர்யாவின் 'எதற்கும் துணிந்தவன்' சூப்பர் அப்டேட் தந்த சன் பிக்சர்ஸ்!

  • IndiaGlitz, [Monday,December 27 2021]

பிரபல நடிகர் சூர்யா நடிப்பில், இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ’எதற்கும் துணிந்தவன்’. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும், இந்த படம் வரும் பிப்ரவரி மாதம் 4-ஆம் தேதி வெளியாக உள்ளது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் நேற்று மாலை ’எதற்கும் துணிந்தவன்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்து இருந்தது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் இந்த பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக இருக்கும் நிலையில் இந்த பாடல் குறித்த சூப்பர் அப்டேட்களை சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

இசையமைப்பாளர் டி இமான் கம்போஸ் செய்த இந்த பாடலை, பிரதீப்குமார், வந்தனா ஸ்ரீனிவாசன் மற்றும் மாணிக்கவாசகன் ஆகியோர் பாடியுள்ளதாவும் இந்த பாடலை யுகபாரதி இயற்றி உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சூர்யா ஜோடியாக பிரியங்கா அருள்மோகன் நடித்த இந்த படத்தில் சத்யராஜ், சூரி உள்பட பலர் நடித்துள்ளனர் என்பதும் ரத்தினவேலு ஒளிப்பதிவில் அந்தோணி ரூபன் இசையில் படத்தொகுப்பில் உருவாகியிருக்கும் இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பு கூடிய படமாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

ஹீரோவை அடுத்து இன்னொரு அவதாரம் எடுக்கும் சதீஷ்: வைரல் புகைப்படம்

தமிழ் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான சதீஷ், 'நாய் சேகர்' என்ற திரைப்படத்தில் நாயகனாக நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

விஷப்பாம்பு என்னை 3 முறை கடித்தது: பிரபல நடிகரின் அதிர்ச்சி தகவல்!

பிரபல நடிகர் ஒருவர் தன்னை விஷப்பாம்பு மூன்று முறை கடித்ததாக கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகர் வடிவேலுவுக்கு ஒமிக்ரான் தொற்றா? அமைச்சரின் அதிர்ச்சி தகவல்!

பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேலு கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேரடியாக ஃபினாலேவுக்கு செல்லும் போட்டியாளர் யார்?

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 84 நாட்களாக நடைபெற்ற நிலையில் இன்று 85வது நாள் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சி இன்னும் ஓரிரு வாரங்கள் மட்டுமே இருக்கும்

பிரபல பின்னணி பாடகர்-நடிகர் காலமானார்: திரையுலகினர் இரங்கல்!

பிரபல பின்னணி பாடகர் மற்றும் நடிகர் மாணிக்க விநாயகம் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 78