ஒரே பாடலில் இணைந்த 5 பிரபலங்கள்: 'எதற்கும் துணிந்தவன்' சூப்பர் அப்டேட்!
Send us your feedback to audioarticles@vaarta.com
சூர்யா நடிப்பில், பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ’எதற்கும் துணிந்தவன்’ என்ற படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் மலையாளம் ஆகிய ஐந்து மொழிகளில் வரும் பிப்ரவரி 4ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக நேற்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்தது என்பதையும் பார்த்தோம்.
இந்த நிலையில் சற்று முன் சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தின் சூப்பர் அப்டேட் ஒன்றைக் கொடுத்துள்ளது. ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படத்தின் சிங்கிள் பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த பாடலில் ஐந்து பிரபலங்கள் இணைந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. டி இமானின் அட்டகாசமான இசையில், விக்னேஷ் சிவன் எழுதிய இந்த பாடலை பிரபல இசையமைப்பாளர் அனிருத் மற்றும் ஜிவி பிரகாஷ் இணைந்து பாடியுள்ளனர் என்பதும், இந்த பாடலுக்கு சூர்யா செம நடனம் ஒன்றையும் ஆடியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சூர்யா, இமான், அனிருத், ஜிவி பிரகாஷ் மற்றும் விக்னேஷ் சிவன் ஆகிய ஐந்து பிரபலங்கள் இணைந்துள்ள இந்த பாடலின் சிறு வீடியோவை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்ட நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
#ETFirstSingle is ready to hit you Tomorrow at 6pm!
— Sun Pictures (@sunpictures) December 14, 2021
An @immancomposer musical | Sung by @gvprakash & @anirudhofficial | Lyrics: @VigneshShivN@Suriya_offl @pandiraj_dir #Sathyaraj @RathnaveluDop @priyankaamohan @sooriofficial @AntonyLRuben @VijaytvpugazhO #EtharkkumThunindhavan pic.twitter.com/ut0ye7zrf4
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments