அந்த பொண்ணை தூக்கிட்டான்னா செம வொர்த்: 'எதற்கும் துணிந்தவன்' புரமோ வீடியோ
Send us your feedback to audioarticles@vaarta.com
சூர்யா நடித்த 'எதற்கும் துணிந்தவன்’ திரைப்படம் வரும் 10ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்தின் புரமோஷன் பணிகளை சன் பிக்சர்ஸ் நிறுவனம் விறுவிறுப்பாக கவனித்து வருகிறது என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் சற்று முன்னர் சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தின் புரமோ வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. 21 வினாடிகள் மட்டும் உள்ள இந்த வீடியோவில் சும்மா சுர்ரூன்னு என்ற பாடல் காட்சிகளும், சில வசனங்களும் உள்ளன. அதில் சூர்யாவின் அம்மா கேரக்டரில் நடித்துள்ள சரண்யா பொன்வண்ணன், ‘தம்பி மட்டும் இந்த பொண்ண தூக்கிட்டான்னு வைங்க, சும்மா சூப்பர் வொர்த்துங்க’ என்று கூறுவதும், இதனையடுத்து சூர்யாவை பார்த்து சத்யராஜ் ’தூக்கிட்றா’ என்று சொல்வதுமான காட்சிகள் உள்ளன. மொத்தத்தில் இந்த புரமோ வீடியோவை பார்க்கும் போது படத்தை உடனே பார்க்க வேண்டும் என்ற ஆவலை ஏற்படுத்தி உள்ளது
சூர்யா ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ள இந்த படத்தில் சத்யராஜ், ராஜ்கிரண், சரண்யா பொன்வண்ணன், சூரி, எம்எஸ் பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். டி இமான் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தை பாண்டிராஜ் இயக்கியுள்ளார்.
#SummaSurrunu oru family entertainer is ready to hit the screens on March 10th!@Suriya_offl @pandiraj_dir #Sathyaraj @immancomposer @RathnaveluDop @priyankaamohan @VinayRai1809 @sooriofficial @AntonyLRuben #EtharkkumThunindhavan #ETpromo5 #ETfromMarch10 pic.twitter.com/Kw6RelCqPG
— Sun Pictures (@sunpictures) March 7, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Megha
Contact at support@indiaglitz.com