சூர்யாவின் 'எதற்கும் துணிந்தவன்': அடுத்தகட்ட படப்பிடிப்பு குறித்த தகவல்!

  • IndiaGlitz, [Thursday,September 02 2021]

சூர்யா நடிப்பில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ’எதற்கும் துணிந்தவன்’. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் காரைக்குடியில் நடந்தது என்பதும் 51 நாட்கள் நடந்த படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்று இயக்குனர் பாண்டிராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருந்தார் என்பதையும் பார்த்தோம்

இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு குறித்த தகவல் வெளிவந்துள்ளது. ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு செப்டம்பர் இரண்டாவது வாரம் சென்னை ஈசிஆர் அருகே நடைபெறுவதாகவும், இதற்கான ஆரம்பகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. அனேகமாக இந்த படப்பிடிப்புடன் இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இந்த படத்தை வரும் டிசம்பர் மாதம் கிறிஸ்மஸ் தினத்தில் வெளியிட தயாரிப்பு நிறுவனம் சன் பிக்சர்ஸ் திட்டமிட்டு உள்ளது என்பதும், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

சூர்யா, பிரியங்கா மோகன், சத்யராஜ், ராஜ்கிரண், சரண்யா பொன்வண்ணன், சூரி, எம்எஸ் பாஸ்கர், ஜெயப்பிரகாஷ், தேவதர்ஷினி உள்பட பலர் நடித்த இந்த திரைப்படத்திற்கு டி இமான் இசையமைத்து வருகிறார். இந்த படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.