சூர்யாவின் 'எதற்கும் துணிந்தவன்': 'வாடா தம்பி பாடல் வைரல்

சூர்யா நடித்த ’எதற்கும் துணிந்தவன்’ என்ற படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்த நிலையில் இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் இந்தப் படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி 4-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற பாடல் ஒன்று இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என ஏற்கனவே படக்குழுவினர் அறிவித்த நிலையில் சற்று முன் அந்த பாடல் வெளியாகியுள்ளது.

டி இமான் இசையில் உருவாகிய இந்த பாடலை இயக்குனர் விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார் என்பது ஜிவி பிரகாஷ் மற்றும் அனிருத் ஆகிய இருவரும் இணைந்து இந்த பாடலை பாடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் முறை கேட்கும்போதே செம ஆட்டம் போடும் வகையில் இருக்கும் இந்த பாடல் நிச்சயம் ரசிகர்களை கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

சூர்யா, பிரியங்கா மோகன், சத்யராஜ், ராஜ்கிரண், சரண்யா பொன்வண்ணன், சூரி, எம்எஸ் பாஸ்கர், ஜெயப்பிரகாஷ், தேவதர்ஷினி உள்பட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

More News

சொந்த கிராமத்திற்காக 'யார்க்கர்' நடராஜன் செய்த மகத்தான உதவி!

சொந்த கிராமத்தின் இளைஞர்களுக்காக இந்திய கிரிக்கெட் அணியின் யார்க்கர் மன்னன் நடராஜன் செய்த மகத்தான செயல் குறித்த தகவல் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது. 

விஜய் பேசிய உருது வசனங்கள்: 'பீஸ்ட்' பட நடிகர் வெளியிட்ட தகவல்!

தளபதி விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகிய 'பீஸ்ட்' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதும்

அமுக்கு டுமுக்கு அமால் டுமால்: சிவகார்த்திகேயனின் 'டான்' ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் 

பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து முடித்திருக்கும் திரைப்படங்களில் ஒன்று 'டான்' என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று

முதல் படத்திலேயே பிரபலமான இயக்குனரின் அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்?

அறிமுகமான முதல் படத்திலேயே பிரபலமான இயக்குனர் ஒருவர் இயக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. 

தடுப்பூசி செலுத்தாவிட்டால் வேலை காலி… பீதியை கிளப்பும் பிரபல நிறுவனம்!

உலகின் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனமான கூகுள் மற்றும் அதன் தலைமை நிறுவனம் ஆல்ஃபாபெட் நிறுவனத்தில்