சூர்யாவின் 'எதற்கும் துணிந்தவன்' ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலின் டைட்டில் இதுவா?

  • IndiaGlitz, [Monday,December 13 2021]

சூர்யா நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்டமான தயாரிப்பில் உருவாகி வரும் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தின் சிங்கிள் பாடல் மிக விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அந்த பாடல் குறித்த தகவல் கசிந்துள்ளது. ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் சிங்கிள் பாடலின் டைட்டில் ’வாடா தம்பி’ என்று தொடங்கும் என்று கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்தில் இசையமைப்பாளர் அனிருத் ஒரு பாடலை பாடி உள்ளதாகவும், அதேபோல் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் ஒரு பாடலை பாடியிருப்பதாகவும் வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் ’வாடா தம்பி’ என்ற இந்த பாடலை பாடியது அனிருத்தா? அல்லது ஜிவி பிரகாஷா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

டி இமான் இசையில் உருவாகிவரும் இந்த படத்தில் சூர்யா, பிரியங்கா மோகன், சத்யராஜ், ராஜ்கிரண், சரண்யா பொன்வண்ணன், சூரி, எம்எஸ் பாஸ்கர், ஜெயப்பிரகாஷ், தேவதர்ஷினி உள்பட பலர் நடித்துள்ளனர்.