திரையரங்குகளில் வெளியாகும் 'சூரரைப்போற்று': முன்பதிவுகள் ஆரம்பம்!

  • IndiaGlitz, [Tuesday,December 07 2021]

பொதுவாக ஓடிடியில் நேரடியாக ரிலீஸான திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியிட ஓடிடி நிறுவனம் சம்மதிக்காது என்பதும், திரையரங்கு உரிமையாளர்களும் அந்த படத்தை வெளியிட மாட்டார்கள் என்பதும் தெரிந்ததே.

ஆனால் சூர்யா நடித்த ’சூரரைப்போற்று’ திரைப்படம் கடந்த ஆண்டு நேரடியாக அமேசான் ஓடிடியில் வெளியான நிலையில் இந்த படம் டிசம்பர் 26ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆனால் இந்த படம் கேரளாவில் உள்ள திரையரங்குகளில் மட்டும் வெளியாக உள்ளது என்பதும் அதற்கான முன்பதிவுகள் தற்போது நடைபெற்று வருகிறது என்பது, குறிப்பிடத்தக்கது

முன்பதிவு டிக்கெட்டுகளை விமான டிக்கட் போலவே அச்சடிக்கப்பட்டு உள்ளது என்பது சிறப்பு அம்சமாகும். கேரளாவில் இந்த படத்திற்கு ரசிகர்களுக்கான சிறப்பு காட்சியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த காட்சிகளின் டிக்கெட்டுகள் வேகமாக விற்பனையாகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.